திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் சிவன்மலையில் மிகவும் புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. மிகவும் பழமையான இந்த கோயிலில், சூப்ரமணியர், வள்ளியுடன் ஒரே கருவறையில் காட்சியளிப்பார். குறிப்பாக, இருவரும் திருமண கோலத்தில் எழுந்தருளியுள்ளனர். வள்ளியை மணம் முடித்த முருகப்பெருமான் இங்குதான் குடியேறியதாக நம்பப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிவபெருமான் திரிபுரத்தை அழிக்க மேருமலையை வில்லாகப் பயன்படுத்தியபோது அதில் இருந்து சிதறிய ஒரு சிறுபகுதியே சிவன்மலை என நம்பப்படுகிறது. இது பார்வதி மற்றும் அகத்தியர் சிவனை நோக்கித் தவம் செய்த தலம் என்றும் கூறப்படுகிறது. முருகப்பெருமான் வள்ளிமலைக்குச் சென்று வள்ளியை மணம்முடித்த பின், வள்ளியுடன் இங்கு குடிகொண்டதாகவும் ஸ்தல வரலாறு உள்ளது.


இந்த கோயிலின் உத்தரவுப் பெட்டி மிகவும் பிரசித்து பெற்றது. இந்த திருக்கோயிலில் ஆண்டவன் (முருகப்பெருமான்) உத்தரவின் பெயரில், ஒரு குறிப்பிட்ட பொருளை வைத்து சிறப்பு பூஜை செய்வது என்பது ஒரு வழக்கமாக உள்ளது. பூசைக்குப் பின்னர், அந்த பொருள் உத்தரவுப் பெட்டி என்றழைக்கப்படும் கண்ணாடிப் பெட்டிக்குள் பக்தர்களின் பார்வைக்காக வைக்கப்படுகின்றது. 


மேலும் படிக்க | உழவர் திருநாளுக்கு உழவர் சந்தையை நோக்கி படையெடுக்கும் பொதுமக்கள்


உத்தரவுப் பெட்டிக்குள் வைக்கப்படும் எந்த பொருளெல்லாம் வைக்கப்படும் என்றால், ஏதாவது ஒரு பக்தரின் கனவில் வந்து சிவன்மலை முருகன் ஒரு குறிப்பிட்ட பொருளை வைத்து பூஜை செய்ய உத்தரவிடும் என்றும், அந்த பக்தர் அந்த பொருளை இக்கோயிலுக்குக் கொண்டு வருவார் என்றும் கூறப்படுகிறது. அவர் சொல்வதன் நம்பகத்தன்மைக்காக கடவுள் முன் பூப்போட்டுப் பார்த்து உறுதி அர்ச்சகர்கள் உறுதிசெய்வார்கள். 


பின்னர் அந்த குறிப்பிட்ட பொருள் கடவுளின் முன் வைத்துப் பூசைசெய்யப்பட்டு, மக்கள் பார்வைக்காக முன்மண்டபத்தில் உள்ள உத்தரவு பெட்டிக்குள் வைக்கப்படும். வேறொரு பக்தரின் கனவில் மற்றொரு பொருளுக்கான உத்தரவு வரும்வரை பழைய பொருளே உத்தரவுப் பெட்டியில் நீடிக்கிறது. வருங்காலத்தில் நடக்கப்போகும் நிகழ்வுகளின் ஒரு முன்னறிவிப்பாக இப்பொருள்கள் முக்கியத்துவம் பெற்றவவை என்பது அங்குள்ள பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. 


அந்த வகையில், பல முறை உத்தரவு பெட்டிகளில் வைக்கப்பட்ட பொருள்கள் சார்ந்த நிகழ்வுகள் வருங்காலத்தில் நிகழ்ந்ததாகவும் கூறப்படுகிறது. அதாவது, ஒருமுறை துப்பாக்கி குண்டுகளை வைத்தபோது, இந்தியா - பாகிஸ்தான் போர் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதுபோன்று பல பொருள்கள் சார்ந்த நிகழ்வுகள் நடந்தேறியதாகவும் கூறப்படுகிறது. 


இந்நிலையில், தற்போது காங்கேயம் பகுதி அருகே உள்ள காடையூரே சேர்ந்த பெண் ஒருவரின் நெற்கதிர் தோற்றியதாக கூறப்பட்டது. எனவே, சிவன்மலை சுப்பிரமணியரின் உத்தரவு பெட்டியான கண்ணாடி பேழைக்குள் நெற்கதிர்களை வைத்து நேற்று (ஜன. 14) பூஜை மேற்கொள்ளப்பட்டது. 


குறிப்பாக, அறுவடை திருநாளாக கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கண்ணாடி பேழைக்குள் நெற்கதிர்கள் வைக்கப்பட்டதால், வரும் காலத்தில் நெற்கதிர்கள் செழித்து வளர வாய்ப்புகள் உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. மேலும், நெல் உற்பத்தி அதிகரிக்கும் என்றும், இதனால் விவசாயம் செழிப்படையும் என்றும் விவசாயிகள், பக்தர்கள் நம்புகின்றனர். 


மேலும் படிக்க | தை பொறந்தாச்சு...களைகட்டியது பொங்கல் கொண்டாட்டம்..! பொங்கல் வைக்கும் முறை இதுதான்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ