Tiruvannamalai Tamil Nadu Lok Sabha Election Result 2024: தமிழ் நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி, நாடாளுமன்ற தேர்தல் நடைப்பெற்றது. பரபரப்பாக 7 கட்டமாக நடைப்பெற்ற இந்த தேர்தலில்  முதல் கட்டமாக தமிழகத்தில்தான் தேர்தல் நடைப்பெற்றது. இறுதியில், 7 கட்டமாக பல மாநிலங்களில் ஒரே நேரத்தில் நடைப்பெற்றது. ஜூன் மாதம் 1ஆம் தேதி முடிவடைந்த இத்தேர்தலின் நிலவரம் வெளிவர இருக்கிறது. நாடே எதிர்பார்த்து காத்திருக்கும் தேர்தல் முடிவுகள் வெளி வரவிருக்கின்றன. இதில், தமிழகத்தின் 11வது சட்டமன்ற தொகுதியாக இருக்கும் தேனியில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்பது குறித்து இங்கு பார்ப்போம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திருவண்ணாமலை தொகுதி:


திருவண்ணாமலையில் மொத்தம் ஆறு தொகுதிகள் உள்லன. திருவண்ணாமலை, செங்கம், கசபாக்கம், ஜோலார் பேட்டை, திருப்பத்தூர் ஆகியவை அந்த தொகுதிகள் ஆகும். இதில் செங்கம் தொகுதி, தனித்தொகுதி. 


2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டவர்கள்:


>அதிமுக+தேமுதிக கூட்டணி சார்பில் கலியப்பெருமாள் போட்டியிட்டார்
>திமுக கூட்டணியில் அண்ணாதுரை போட்டியிட்டார்
>நாம் தமிழர் கட்சி சார்பில் ரமேஷ் பாபு போட்டியிட்டார்
>பாஜக சார்பில் அஸ்வத்தாமன் போட்டியிட்டார். 


மேலும் படிக்க | நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை: கோவையில் பாதுகாப்பு பணிகள் தீவிரம்


2019ஆம் ஆண்டு தேர்தல் நிலவரம்:


நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், இந்த தொகுதியில் மொத்தம் 74.24 சதவிகித வாக்குகள் பதிவாகின. 2019ஆம் ஆண்டில் நடைப்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டவர்கள் யார்? வெற்றி பெற்றவர்கள் யார்? முழு விவரம்!


>சி.என்.அண்ணாதுரை-திமுக-666,272 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்
>அக்ரி கிருஷ்ணமூர்த்தி-அ.இ.அ.தி.மு.க-3,63,085 வாக்குகள் பெற்றார்
>ஞானசேகர்-தனித்து போட்டி-38,639 வாக்குகள்
>ரமேஷ் பாபு-நாம் தமிழர் கட்சி-27,503 வாக்குகள்
>அருள்-மக்கள் நீதி மையம்-14,654 வாக்குகள்


யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்?


திருவண்ணாமலையில், திமுக கட்சியை சேர்ந்த அண்ணாதுரைக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலின் போது அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட -அஇஅதிமுக வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை 3,03,187 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இதனால், இந்த நாடாளுமன்ற தேர்தலிலும் அவருக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும், பாஜக ஆதரவாளர்கள் இங்கு ஏதாவது திருப்பம் நிகழுமா என்று எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர். 


மேலும் படிக்க | லோக்சபா தேர்தல் : தமிழ்நாட்டின் 5 ஸ்டார் தொகுதிகள்! தமிழிசை டூ அண்ணாமலை..! வெற்றி வாய்ப்பு யாருக்கு?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ