திருவண்ணாமலை: பிரசாத பாக்கெட்டில் அன்னை தெரசா புகைப்படம் - 2 குருக்கள் பணியிடை நீக்கம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் விபூதி மற்றும் குங்குமம் பிரசாத பாக்கெட்டில் அன்னை தெரசா புகைப்படம் அச்சிட்டு பக்தர்களுக்கு விநியோகம் செய்த இரண்டு குருக்கள் பணியிடை நீக்கம் செய்து கோவில் நிர்வாகம் உத்தரவிட்டது
திருவண்ணாமலை நகரில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற ஸ்தலமாகவும், பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் ஸ்தலமாகவும் அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவில் விளங்கக்கூடியது. இங்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு விபூதி மற்றும் குங்குமம் அடங்கிய பிரசாத பாக்கெட்டில் அன்னை தெரசா புகைப்படம் அச்சடிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. இதனை கண்டித்து இந்து முன்னணி அமைப்பினர் 50க்கும் மேற்பட்டோர் கோவில் இணை ஆணையர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து இரண்டு குருக்களை கோவில் நிர்வாகம் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்திரவிட்டுள்ளது.
அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் இதுவரை விபூதி மற்றும் குங்குமம் அடங்கிய பிரசாத பாக்கெட்டில் அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமலை அம்மன் உருவம் பதித்த பிரசாத பாக்கெட் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. விளம்பரத்திற்காக மேத்யூ கார்மெண்ட் என்ற துணிக்கடை நிறுவனம் அன்னை தெரசா புகைப்படம் அடங்கிய விபூதி மற்றும் குங்குமம் பிரசாத பாக்கெட்டை கோவிலில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பல லட்சம் கொடுத்து குருக்கள் மூலம் பக்தர்களுக்கு விநியோகம் செய்துள்ளனர்.
மேலும் படிக்க | பிடிஆர் ஆடியோ விவகாரம் குறித்து காட்டமாக பேசிய முக ஸ்டாலின்!
தகவல் அறிந்த இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கோவில் நிர்வாகத்தை கண்டித்து கோவில் இணை ஆணையர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து உடனடியாக கோவில் இணை ஆணையர் குமரேசன் பிரசாத பாக்கெட்டை பக்தர்களுக்கு வழங்கிய சோமநாதகுருக்கள் மற்றும் முத்துக்குமாரசாமி குருக்கள் ஆகிய இருவரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலுக்கு தினம்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களும், மாதந்தோறும் பௌர்ணமி தினங்களில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்களும் அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலையம்மனை தரிசனம் செய்து, பின்னர் கிரிவலம் சென்று வருகின்றனர். இந்நிலையில் கோவிலில் தரிசனத்துக்காக வரக்கூடிய பக்தர்களுக்கு விபூதி மற்றும் குங்குமம் அடங்கிய விபூதி பாக்கெட்டில் அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமலை அம்மன் உருவம் பதித்த பிரசாத பாக்கெட் வாங்கப்பட்டு வந்த நிலையில் கோவிலில் பணிபுரியும் ஊழியர்கள் சிலர் சுயநலத்திற்காக விளம்பரத்திற்காகவும் அன்னை தெரசா புகைப்படம் அடங்கிய பிரசாத பாக்கெட் வாங்கியதால் ஆன்மீக பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ