பிடிஆர் ஆடியோ விவகாரம் குறித்து காட்டமாக பேசிய முக ஸ்டாலின்!

PTR audio tape: தெலங்கானாவில் முஸ்லீம் இடஒதுக்கீட்டை ரத்து செய்வோம் என்ற உள்துறை அமைச்சர் பேச்சுக்கு சமூக வலைத்தளங்களில் முக ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.  

Written by - RK Spark | Last Updated : May 2, 2023, 10:00 AM IST
  • பிடிஆர் ஆடியோ விவகாரம் குறித்து பேசிய முக ஸ்டாலின்.
  • உங்களில் ஒருவன் நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.
  • மேலும் பல கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார் முதல்வர்.
பிடிஆர் ஆடியோ விவகாரம் குறித்து காட்டமாக பேசிய முக ஸ்டாலின்! title=

தமிழக நிதி அமைச்சர்  பழனிவேல் தியாகராஜன் ஆடியோ விவகாரத்தில் மட்டமான அரசியல் செய்வோருக்கு விளம்பரம் தேடித்தர விரும்பவில்லை என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியிருக்கிறார்.  மேலும், சமூக வலைத்தளங்களில் பொய்களைக் கட்டவிழ்க்கும் பா.ஜ.க. என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.  உங்களில் ஒருவன் நிகழ்ச்சியில், கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிலளித்திருக்கும் விடியோ இன்று வெளியிடப்பட்டுள்ளது. உங்களில் ஒருவன் நிகழ்ச்சியில் பிடிஆர் ஆடியோ விவகாரம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பதாவது, ஆடியோ விவகாரத்தில் பழனிவேல் தியாகராஜன் ஏற்கனவே 2 முறை விளக்கம் தந்திருக்கிறார். மேலும், மக்களுக்கான பணிகளை செய்யவே எனக்கு நேரம் சரியாக இருக்கிறது.  நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோ விவகாரத்தில் நான் பதிலளித்து, மட்டமான அரசியல் செய்வோருக்கு விளம்பரம் தேடித்தர விரும்பவில்லை என்று கூறியிருக்கிறார்.  

மேலும் படிக்க | பேனா நினைவுச் சின்னம்: மெரினாவின் அடையாளம் போய்விடும்- ஜெயக்குமார்

பாஜக ஆட்சிக்கு வந்தால் தெலங்கானாவில் முஸ்லீம்களுக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்வோம் என்று உள்துறை அமைச்சரே பேசியிருக்கிறாரே? என்ற கேள்விக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பதாவது, சிறுபான்மை சமூகத்தின் மீதான வன்மம்தான் இதன் மூலம் வெளிப்படுகிறது. தேர்தல், அரசியல் லாபங்களுக்காக உள்துறை அமைச்சர் இப்படி சொல்லியிருக்கிறார். இஸ்லாமிய மக்கள் மீது வெறுப்பை உமிழ்வதுதான் இந்து மக்களை திருப்திப்படுத்தும் என்று பாஜக தலைமை, அவர்களாகவே கற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள்.  ஆனால், பாஜகவிற்கு வாக்களிக்காத பெரும்பாலான மக்கள் இந்துக்கள்தான்.  ஆனால் அவர்கள் அமைதியையும் சகோதரத்துவத்தையும் விரும்பும் மக்கள்.

பாஜக ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்கள் மீது தங்களது வெறுப்புணர்ச்சியை திணித்து அதுதான் ஒட்டுமொத்த மக்களின் மனநிலையும் என்று காட்ட நினைக்கிறது. அதற்கு துணையாக இருப்பது, பொய்களையும் கற்பனையான கதைகளையும் மக்களிடம் கொண்டு சேர்க்க பரப்புரை இயந்திரமாக இருப்பது சமூக ஊடகங்களில் பாஜகவினர் வைத்திருக்கும் கணக்குகள் என்று ஸ்டாலின் கூறியிருக்கிறார்.  மேலும் தலைமைச் செயலகத்தில், சட்டசபை கூட்ட அரங்கில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று  அமைச்சரவை கூட்டம் நடக்கிறது.  இம்மாத இறுதியில், முதல்வர் வெளிநாடு சுற்றுப்பயணம் செல்ல உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. அமைச்சர்கள் பலரும் வெளிநாடு செல்ல உள்ளனர். இதற்கு அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது.

சில தொழில் நிறுவனங்கள், தமிழகத்தில் தொழில் தொடங்க அனுமதி அளிக்கப்பட உள்ளது. நிதி அமைச்சர் பேசியதாக வெளியான ஆடியோவால் ஏற்பட்ட சர்ச்சை, சில சட்ட திருத்தங்களால் ஏற்பட்ட சர்ச்சை ஆகியவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.  ஆட்சி பொறுப்பேற்று, இரண்டு ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், மூன்றாம் ஆண்டில் செய்ய வேண்டிய பணிகள் ஜூன், 3ல், கருணாநிதியின் நுாற்றாண்டு துவக்க விழாவையொட்டி, புதிய திட்டங்களை அறிவிப்பது ஆகியவை குறித்தும், முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.  அமைச்சரவையில் மாற்றம் செய்ய, முதல்வர் திட்டமிட்டு உள்ளதாக தகவல் பரவி வரும் நிலையில், இன்று அமைச்சரவை கூட்டம் நடப்பது, முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

மேலும் படிக்க | அண்ணாமலைக்கு தமிழர்கள் மீது அக்கறை கிடையாது - இயக்குனர் அமீர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News