திருவாரூர் இடைத்தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என கம்யூனிஸ்ட் கச்சியின் டி.ராஜா அளித்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கஜா புயல் நிவாரணப்பணிகளை சுட்டிக்காட்டி திருவாரூர் இடைத்தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான டி.ராஜா வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்துள்ளது.


திமுக தலைவர் கருணாநிதி அவர்களின் மறைவையொட்டி திருவாரூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. வழக்கமாக ஒரு தொகுதி காலியாகி 6 மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதன்படி திருவாரூர் தொகுதிக்கு வருகிற  பிப்., 2-ஆம் தேதிக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.


இந்நிலையில் கடந்த டிசம்பர் 31-ஆம் நாள், திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பினை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. வெளியான அறிவிப்பின் படி, திருவாரூர் தொகுதியில் தேர்தல் நடத்தைகள் உடனடியாக அமுலுக்கு வந்தது. இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று துவங்கி வரும் 10-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தேர்தல் அலுவலரான திருவாரூர் கோட்டாச்சியரிடன் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்து வருகின்றனர்.


இதற்கிடையில் கஜா புயல் நிவாணப் பணிகளை சுட்டிக்காட்டி திருவாரூர் இடைத்தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை சென்னை உயர்நிதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்த நிலையில், டி.ராஜா உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்தார். டி.ராஜா அளித்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் விரைவில் இந்த மனு மீதான விசாரணையினை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.