திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சுப்ரமணியன் மனைவி இந்திராணி. இவருக்கு சொந்தமாக புஞ்சை நிலங்கள் உள்ளது. இந்த நிலங்களை தனது மகனான சுப்பிரமணியனுக்கு தான செட்டில்மெண்ட் செய்ய இந்திராணி முடிவு செய்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


அதன்படி விதிமுறைகளுக்கு உட்பட்டு ரூ.25 ஆயிரத்திற்கு பத்திரங்கள் வாங்கி, செலுத்த வேண்டிய கட்டணங்களை செலுத்தி பத்திரப்பதிவு செய்ய இணையதளத்தில் இந்திராணி பதிவு செய்துள்ளார். 2019 மார்ச் மாதம் பத்திரப்பதிவுக்கான நேரம் ஒதுக்கப்பட்டதை அடுத்து இந்திராணியும் அவரது மகன் சரவணனும் பத்திரப் பதிவிற்காக முத்துப்பேட்டை சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்றுள்ளனர்.



அங்கு சார் பதிவாளர், இந்திராணி சொத்தின் மீது முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு உள்ளதாகவும், வழக்கு விசாரிக்க வேண்டிய உள்ளதால் பத்திரப்பதிவு செய்ய வேண்டாம் என போலீஸார் கடிதம் அனுப்பியுள்ளதாக கூறி பத்திரப்பதிவு செய்ய இயலாது என கூறியுள்ளார்.


இது தொடர்பாக இந்திராணியும், அவரது மகன் சரவணனும் திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில், விதிமுறைகளை மீறி சார் பதிவாளர், தங்களது தானப் பத்திரத்தைப் பதிவு செய்ய மறுத்து விட்டதால், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவரது மனுவில் குறிப்பிட்டிருந்தார். 



இந்த வழக்கு விசாரித்த ஆணைய தலைவர் சக்கரவர்த்தி, சார் பதிவாளர் இந்திராணி சொத்து மீது உள்ள வழக்கை காரணம் காட்டி பத்திரப்பதிவு செய்ய இயலாது என முத்துப்பேட்டை சார்பதிவாளர் கூறியிருப்பது சட்டத்திற்கு எதிரானதாகும். 


முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் இந்திராணி சொத்து மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் உரிய ஆதாரங்கள் இல்லாதபோது, பத்திரப்பதிவை நிறுத்தியது, புகார்தாரர்களுக்கு மிகப்பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தும் விதமாக உள்ளது.


மேலும் படிக்க | 8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! ரூ.95,000 வரை சம்பளம் உயர வாய்ப்பு!


எனவே புகார்தாரர்களுக்கு  ரூ. 1 லட்சம் இழப்பீடும், வழக்கு செலவு தொகையாக ரூ.10 ஆயிரமும்  ஒரு மாதத்திற்குள் முத்துப்பேட்டை சார்பதிவாளர் வழங்க வேண்டும். மேலும் அவர் இந்திராணியின்  சொத்தை அவரது மகனுக்கு தானப் பத்திரப் பதிவை ஆறு வாரத்திற்குள் செய்து தர வேண்டும் என உத்தரவிட்டார். 


மேலும் படிக்க | இந்த உணவுகளை தவறாமல் சாப்பிட்டால் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ