தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின்றன. 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 17ஆம் தேதி வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளுடன் சேர்த்து இன்று வெளியாகிறது. தேர்வு முடிவுகளை மாணவர்கள் tnresults.nic.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னதாக தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மே 23 ஆம் தேதி முடிவடைந்தது. அதன்பின், தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி ஜூன் 1-ஆம் தேதி தொடங்கியது எனபது குறிப்பிடத்தக்கது. இதனிடையே 12 ஆம் வகுப்பு தேர்வை 1,95,292 மாணவர்கள் என மொத்தம் 6,79,467 மாணவர்கள் எழுதவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து, பொதுத்தேர்வில் பங்கேற்காத மாணவர்களை மீண்டும் தேர்வு எழுத வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார்.


மேலும் படிக்க | 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு... எழுதாதவர்கள் எத்தனை பேர் தெரியுமா?


இந்நிலையில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 8.3 லட்சம் மாணவர்களும் எழுதியிருந்த நிலையில், தமிழகத்தில் ,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (ஜூன் 20-ம் தேதி) வெளியிடப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று காலை 10 மணிக்கு 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சென்னையில் வெளியிடுகிறார்.


தேர்வு முடிவுகள் எப்படி பார்ப்பது?
* இணையதள முகவரி : www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in தேர்வர்கள் மேற்கண்டுள்ள இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.


* ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.


* அதேபோல் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.


எஸ்எம்எஸ் வாயிலாகவும் தேர்வு முடிவுகள் சரிபார்க்கலாம்
பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கும் , தனித்தேர்வர்களுக்கும், ஆன்-லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.


பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் இணையதளங்களின் விவரம்
www.tnresults.nic.in,
www.dge1.tn.nic.in ,
www.dge2.tn.nic.in ,
மற்றும் www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் வாயிலாக மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறியலாம்.


மேலும் படிக்க | நாளை நடக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் -2 தேர்வு குறித்த முழு விவரம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR