தமிழக மீனவர்கள் 8 பேர் கைது!
தமிழக மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
நெடுந்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்தது.
கைதான 8 பேரையும் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று, அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றது.
மேலும் தமிழக மீனவர்களின் இரு படகுகளையும், இலங்கை கடற்படை பறிமுதல் செய்தது.