தமிழக சட்டமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், வாக்காளர்களை கவர, கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு சலுகைகளையும் இலவசங்களையும் அள்ளி வீசி வருகின்றன. 
 இந்நிலையில் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். திமுக இந்து விரோத கட்சி என தொடர்ந்து பிரச்சாரம் செய்யப்பட்டு வரும் நிலையில்,  இந்துக்கள் வாக்குகளை கவரும் வண்ணம் ஆலயங்களை சீரமைக்க ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்க வலுயுறுத்தப்படும் என்பது உட்பட, வாக்காளர்களை கவர பல வாக்குறுதிகள் தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ளது. 


  • COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    பத்திரிகையாளர்களுக்கு தனி ஆணையம் அமைக்கப்படும்

  • கலைஞர் உணவகம் அமைக்கப்படும்

  • நீட் தேர்வு ரத்து செய்யப்படும். நீட் தேர்வை ரத்து செய்ய முதல் பேரவை கூட்டத்தொடரில் சட்டம் இயற்றப்படும்

  • சைபர் காவல்நிலையங்கள் செயல்படுத்தப்படும்

  • மீனவர்கள் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்படுவர்

  • தனியார் நிறுவனங்களிலும் இட ஒதிக்கீடு

  • அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் மக்கள் குறை தீர்ப்பு முகாம்

  • ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும்

  • மாற்றுத் திறனாளிகளுக்கு ஸ்மார்ட் கார்டு திட்டம்

  • விவசாயத்துக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்


என்பது போன்ற பல வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளன.


இன்னும் அதிமுகவின் தேர்தல் அறிக்கை வெளியாகவில்லை. 
மேலும் பாஜகவின் வேட்பாளர் பட்டியலும் இன்னும் வெளியாகவில்லை. இன்று மாலைக்குள் வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


ALSO READ | தமிழக சட்டமன்றத் தேர்தல்: பாஜக இன்று வேட்பாளர் பட்டியலை வெளியிடக்கூடும்


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR