தமிழக சட்டமன்றத் தேர்தல்: பாஜக இன்று வேட்பாளர் பட்டியலை வெளியிடக்கூடும்

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் வரவிருக்கும் ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டத்தில் நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி நடைபெறும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 13, 2021, 10:16 AM IST
  • தமிழகத் தேர்தலுக்கான வேட்பாளர்களின் பெயர்களை பாரதீய ஜனதா கட்சி இன்று அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • கேரள சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலையும் பாஜக விரைவில் வெளியிடும்.
  • இரு மாநிலங்களிலும் சட்டமன்றத் தேர்தல்கள் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளன.
தமிழக சட்டமன்றத் தேர்தல்: பாஜக இன்று வேட்பாளர் பட்டியலை வெளியிடக்கூடும் title=

தமிழகத் தேர்தல் 2021: வரவிருக்கும் தமிழகத் தேர்தலுக்கான வேட்பாளர்களின் பெயர்களை பாரதீய ஜனதா கட்சி இன்று அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் வரவிருக்கும் ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டத்தில் நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி நடைபெறும்.

பாரதிய ஜனதா கட்சியைப் (BJP) பொறுத்த வரை, முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இம்முறை தமிழகத்தில் அவர்களது இருப்பும் ஆதரவும் செல்வாக்கும் அதிகரித்துள்ளது என்பது அரசியல் நிபுணர்களின் கருத்தாக உள்ளது. சமீக காலங்களில் பல முக்கிய புள்ளிகளும், திரைத் துறை பிரமுகர்களும் பாஜக-வில் சேர்ந்ததை நாம் பார்த்தோம். தேசியக் கட்சியாக இருப்பதால், இக்கட்சியின் முக்கிய ஆளுமைகள் தேசியத் தலைவர்களாகவே இருந்து வந்தனர்.

எனினும், இந்த தேர்தல்களில் அந்த நிலை மாறி, தமிழகத்தின் பல பிரபலங்களின் மூலம் பாஜக தன்னை அடையாளப்படுத்தியுள்ளது. இந்த தேர்தல், பாஜக-வைப் பொறுத்தவரை, ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக இருக்கும் என கூற முடியாது என்றாலும், கண்டிப்பாக, முன்பை விட அதிக வாக்கு சதவீதத்தையும் அதிக தொகுதிகளையும் இக்கட்சி பெறும் என நம்பப்படுகின்றது.

தமிழகத் தேர்தலுக்கான தனது கட்சியின் 173 வேட்பாளர்களின் பட்டியலை நேற்று திராவிட முன்னேற்ற கழகம் (திமுக) வெளியிட்டிருந்தது. கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மீண்டும் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவார். ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் உள்ள சேப்பாக்-டிரிப்ளிகேன் பிரிவில் களமிறங்குவார்.

கட்சியின் மூத்த உறுப்பினர்களான துரை முருகன், கே என் நேரு, கே பொன்முடி மற்றும் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் மற்றும் பெரும்பாலான தற்போதைய எம்.எல்.ஏ.க்களை ஸ்டாலின் தக்க வைத்துக் கொண்டுள்ளார். திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய திமுக தலைவர், தங்க தமிழ்செல்வன், துணை முதல்வர் ஓ. பன்னீசெல்வத்தை எதிர்த்தும், டி.சம்பத்குமார் முதல்வர் கே.பழனிசாமியை எதிர்த்து எடப்பாடியிலும் போட்டியிடுவார்கள் என தெரிவித்தார்.

ALSO READ: TN election 2021: அமமுக கூட்டணியின் தேர்தல் அறிக்கை வெளியீடு

திமுக (DMK) பொதுச்செயலாளர் துரைமுருகன் காட்பாடியிலிருந்து போட்டியிடுவார். தான் மார்ச் 15 அன்று வேட்புமனுவைத் தாக்கல் செய்யப்போவதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார். தமிழகத்தில் வேட்பாளர்களின் வேட்புமனுத் தாக்கல் துவங்கியது.

2011 முதல் ஆட்சியைப் பிடிக்க முடியாமல் உள்ள திமுக, இம்முறை அதிமுக-வை தோற்கடித்து ஆட்சியை பிடிக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. மேலும் காங்கிரஸ், இடதுசாரிகள், மதிமுக, வி.சி.க மற்றும் பிற சிறிய அமைப்புகளை உள்ளடக்கிய ஒரு வானவில் கூட்டணியை திமுக இம்முறை கொண்டுள்ளது. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் அவர்களுக்கு திமுக 61 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது.

மதிமுக உள்ளிட்ட பல கட்சிகள் திமுக-வின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடும் என்பதால், திமுக, 187 இடங்களில் களத்தில் இறங்கும் என்றே வைத்துக்கொள்ளலாம்.

அதிமுக-வைப் (AIADMK) பொறுத்தவரை, அக்கட்சி, பாஜக, பாமக உள்ளிட்ட கூட்டணிகட்சிகளோடு மிகப்பெரிய நம்பிக்கையுடன் தேர்தல் களத்தில் உள்ளது. கட்சியின் நிலைத்தன்மைக்கு அச்சுறுத்தலாக இருக்கக்கூடும் என கருதப்பட்ட சசிகலாவின் விடுதலை, சசிகலா அரசியலை விட்டு விலகியதால், பெரும் குழப்பத்தை ஏற்படுத்தாமல் கட்சிக்கு சாதகமான நிலையையே ஏற்படுத்தியுள்ளது.

கேரள சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலையும் பாஜக விரைவில் வெளியிடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கேரளத்திலும், சட்டமன்றத் தேர்தல்கள் ஏப்ரல் 6 ஆம் தெதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளன.

ALSO READ: கோவை தெற்கு தொகுதியில் களம் காணப்போகிறார் கமல்ஹாசன்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News