தாராபுரத்தை மேம்படுத்துவதே எனது குறிக்கோள்: பாஜக வேட்பாளர் எல்.முருகன்
பாஜக வேட்பாளர் எல்.முருகன் வேட்புமனு தாக்கல் செய்த பிறகு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், பாஜக வெற்றி பெறுவது உறுதி என்றார். அந்த வெற்றி எவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் இருக்கும் என்று மட்டுமே பார்க்க வேண்டும் என்றார்.
தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரும் பாஜகவின் மாநில தலைவரும் ஆன எல்.முருகன் இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.
திருப்பூர் மாவட்டம் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் (BJP) வேட்பாளராக கட்சியின் மாநில தலைவர் முருகன், வாகனத்தில் ஊர்வலமாக சென்று இன்று வேட்பு மனு தாக்கல் செய்கையில் மக்கள் வெள்ளம் போல் திரண்டு வந்தனர்.
மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி ஊர்வலத்தில் கலந்து கொண்டார். அதிமுக கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் அதிமுக திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் மகேந்திரன் ஆகியோரும் பிரச்சார வாகனத்தில் வேட்பு மனுவை தாக்கல் செய்யும் திரு.எல். முருகனுடன் ஊர்வலமாக சென்றனர்.
பாஜக வேட்பாளர் எல்.முருகன் வேட்புமனு தாக்கல் செய்த பிறகு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், பாஜக வெற்றி பெறுவது உறுதி என்றார். அந்த வெற்றி எவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் இருக்கும் என்று மட்டுமே பார்க்க வேண்டும் என்றார். தாராபுரத்தின் வளர்ச்சி மற்றும் மேம்பாடு என்ற குறிக்கோளை நோக்கியே எங்களது செயல்பாடுகள் இருக்கும் என அவர் கூறினார்.
நேற்று, 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ள பா.ஜ.கவின் இரண்டாம் கட்ட வெற்றி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.
தளி தொகுதியில் திரு.நாகேஷ் குமார், உதகமண்டலத்தில் திரு.போஜராஜன் மற்றும் விளவங்கோடு தொகுதியில் திரு. R.ஜெயசீலன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
ALSO READ | இந்த முறை உண்மை பேசும் எனக்கு வாக்களியுங்கள்: அரவக்குறிச்சியில் அண்ணாமலை பிரச்சாரம்
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR