திமுக - CPIM கட்சி இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது!
திமுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. CPIM க்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக சார்பில் 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் CPIM மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு, திமுக (DMK) கூட்டணியில் இடம் பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (CPIM) கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்க முடிவு செய்யப்பட்டது. அதனை CPIM ஏற்றுக் கொண்டதால், ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
ALSO READ | DMK ALLIANCE Seat Sharing: மதிமுக 6 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டி
திமுக வேட்பாளர் கள் பட்டியல் வரும் 10-ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் ஆறாம் தேதியன்று தமிழகத்தில் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் (Assembly Elections) வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஒருமாத காலமே உள்ள நிலையில், திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு வருகின்றன.
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள், இந்தியன் யூனியன் முஸ்லீம் கட்சிக்கு 3 தொகுதிகள், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதி ஒதுக்கீட்டு கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தது. அதேபோல, இந்தியன் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
இந்நிலையில், திமுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடையே இன்று தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது.
Also Read | தேர்தல் களத்தில் திமுக: Prashant Kishor வகுத்த வியூகம் வெற்றி பெறுமா? சூரியன் உதயமாகுமா?
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR