தமிழகத்தில் சசிகலா விடுதலையை தொடர்ந்து பெரிய மாற்றம் ஏற்படும் என பலர் எதிர்பார்த்த நிலையில், பதவிக்கோ புகழுக்கோ ஆசைப்பட்டதில்லை என கூறி, அரசியலில் இருந்து விலகுவதாக சில நாட்களுக்கும் முன் அறிவித்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி மீண்டும் அமைய, பொது எதிரியான திமுகவை வீழ்த்த தொண்டர்கள் பாடுபட வேண்டும் எனவும் சசிகலா (Sasikala) கேட்டுக் கொண்டார்.


இதனால், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் (அமமுக) பொது செயலாளர் ஆன டிடிவி தினகரனுக்கு பெரும் பின்னடைவாக கருதப்பட்டது. 


இந்நிலையில், ”அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணியில், திரு.அசதுத்தீன் உவைசி M.P., அவர்கள் தலைமையிலான அகில இந்திய மஜ்லிஸ்-ஏ-இத்திஹாதுல் முஸ்லிமீன்  கட்சிக்கு தமிழ்நாட்டில் வாணியம்பாடி, கிருஷ்ணகிரி, சங்கராபுரம் ஆகிய 3 தொகுதிகள் ஒதுக்கீடு” என டிடிவி தினகரன் ட்வீட் செய்துள்ளார். 



பாஜகவின் பி டீம் என அழைக்கப்படும் அசதுதீன் ஒவைசியின் (Asaduddin Owaisi) AIMIM கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது பற்றி, பலர் கருத்து தெரிவித்துள்ளனர். பாஜகவிற்கு ஆதரவாக, முஸ்லிம் வாக்குகளை பிரிக்க இந்த கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது என விமர்சனம் செய்து வருகின்றனர். 


ALSO READ | திமுக - CPIM கட்சி இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது!
 


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR