தருமபுரியில் பாரதிய ஜனதா கட்சியின் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த ஆலோசனை கூட்டத்தில், பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசும் போது, "மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 மசோதாக்களின் நன்மைகள் குறித்து கிராமங்கள் தோறும் விவசாயிகளை சந்தித்து எடுத்து கூற வேண்டும் எனக்கோரிக்கை வைத்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் பேசிய அவர், விநாயகர் சதுர்த்தி அன்று பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட திமுக அரசு அனுமதி மறுத்துள்ளது. இதனால் விநாயகர் சதுர்த்தி அன்று  தமிழகம் முழுவதும் அவர்களது வீடுகள் முன்பு விநாயகர் சிலைகள் வைத்து வழிபட வேண்டும். மேலும்  தமிழக முதல்வர் ஸ்டாலின் கிருஸ்துமஸ் மற்றும் ரம்ஜான் வாழ்த்துகள் தெரிவிப்பார். ஆனால் அவர் விநாயகர் சதூர்த்தி வாழ்த்துகள் தெரிவிக்க மாட்டார். இதனால் மக்கள் நீங்கள் தமிழக முதல்வருக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் தெரித்து போஸ்டல் அனுப்ப வேண்டும் அப்போது தான் அவருக்கு தமிழர்களினர் உணர்வு  புரியும் என்றார். 


மேலும் நீட் தேர்வு ரத்து செய்வோம் என கூறும் அவர், இந்தாண்டு நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது, அடுத்த ஆண்டு பார்ப்போம் என மக்களை ஏமாற்றி வருகிறார்கள். மேலும்  நீட் தேர்வு ரத்து செய்வது எதற்கு என்றால் திமுகவில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் கல்வி தந்தையர்களாக உள்ளனர். இதனால் அவர்கள் தொழில் பாதிக்கபடும் என  நீட் தேர்வை ரத்து செய்ய நினைக்கிறார்கள். நீட் தேர்வை திமுகவினர் குடும்பத்திருனர் மட்டும் ரத்து செய்ய நினைக்கின்றனர். 


ALSO READ |  சமூக நீதிக்காக போராடிய மற்ற தலைவர்களையும் இருட்டடிப்பு செய்யமால் இருக்க வேண்டும். அண்ணாமலை


மேலும் திமுக அரசின் 130வது நாள்  சாதனை என்ன வென்றால் சட்டமன்றத்தில் மக்களுக்காக நேரம் ஒதுக்காமல் 23 ஆம் புலிகேசி படத்தில் வரும் காமெடி போன்று திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் ஸ்டாலினையும் அவரது மகனையும் புகழ்ந்து பேசி வருகின்றனர் என்றார். 


இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் மசோத சட்டத்தை எதிர்த்து போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்திலிருந்து எந்த விவசாயிகளும் செல்லவில்லை கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் தான் ரயிலில் சென்றனர் என்றார். 


ALSO READ |  விநாயகர் சதுர்த்தி விழா மீதான தடை சரியல்ல: மதுரை ஆதீனம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR