கோவை போலீசாரை பாராட்டி குட்டும் பாஜக அண்ணாமலை: செய்தியாளர் சந்திப்பு
Annamalai Press Meet Covai: கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்தித்து பேசினார், காவல்துறைக்கு பாராட்டும் குட்டும் வைத்தார் அண்ணாமலை
கோவை: கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்தித்து பேசினார். அப்போது அவர், கோவையில் பெரும் தீவிரவாத தாக்குதல் தடுக்கப்பட்டிருக்கிறது என்றும் அதற்கு நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டு, இந்த தாக்குதல் தொடர்பான தனது கவலைகளை பதிவு செய்தார். 23 ம் தேதி காலை நான்கு மணிக்கு கோவில் வாசலில் சம்பவம் நடந்துள்ளது என்றும், அனைத்து தரப்பும் இதை பற்றி பேசி வருகிறது, ஆனால் இதைத் தாண்டி செல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
98 குண்டு வெடிப்புக்கு பின், பத்து ஆண்டுகள பின்னோக்கி என்ற கோவை, இந்த சம்பவம் நடந்திருந்தால் மீண்டும் பின்னோக்கி சென்றிருக்கும் என்று தெரிவித்தார். தற்கொலைப்படை தாக்குதல் என தெரிந்தபிறகு காவல்துறை சிறப்பாக செயல்பட்டு உயிரை பணயம் வைத்து செயலாற்றியுள்ளனர் என்றும், கோவை போசீசாருக்கு நன்றிக்கடன் செலுத்த வேண்டும் என்றும் நெகிழ்ச்சி தெரிவித்தார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.
மதத்தால் பிளவு படுத்த முயன்றாலும் மக்கள் ஒன்றாக உள்ளனர் என்று கூறிய அண்ணாமலை, மதத்தால் பிரித்து மக்களின் ஒற்றுமை உணர்வை சிதைக்க முயற்சி செய்பவர்கள் மீது பாஜக மத சாயத்தை பூசவில்லை. அவர்களை குற்றவாளிகள் என்று தான் கூறி வருகிறோம் என்று சுட்டிக்காட்டினார்.
கோவை நகரத்தில் எந்த மதத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் வன்முறையை கையில் எடுக்க கூடாது, வன்முறையை கையில் எடுப்பவர்களுக்கு ஆதரவளிக்க கூடாது என்றும் தெரிவித்தார். எல்லா மதமும் அமைதியை நன்மையை தான் சொல்லுகிறது என்பதையும் அண்ணாமலை சுட்டிக்காட்டினார்.
மேலும் படிக்க | அதிகரித்தது க்ரூட் ஆயில் விலைகள்! பெட்ரோல் டீசல் விலைகளில் மாற்றமா?
இன்று முதல் கோவை அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்ட திரு. அண்ணாமலை, கோவை மாநகர காவல்துறைக்கு நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் நாங்கள் மாநில அரசிடம் கேள்வி வைத்துள்ளோமே தவிர, .அதில் அரசுக்கு தொந்தரவு செய்யும் நோக்கம் இல்லை என்று தெரிவித்தார்.
இன்னும் அடுத்த நான்கு ஆண்டுகள் ஆளும்கட்சி தமிழகத்தில் ஆட்சி செய்யவேண்டும் எனவே, விழிப்புணர்வுடன் செயல்படவேண்டும் என்று சொன்ன அண்ணாமலை, இந்த பிரச்சனையை சாதாரண நிகழ்வாக செய்யவில்லை.மிகப்பெரிய உயிர் சேதம் ஏற்படுத்த வேண்டும் என செய்துள்ளனர் என்று குறிப்பிட்டார்.
காவல்குறை திருத்த வேண்டிய சில உள்ளன, அதை சரி செய்ய வேண்டும் என்பதற்காகதான் அதைப் பற்றி சொல்லி வருகிறோம் என்று அண்ணாமலை தெரிவித்தார்.
காவல்துறையின் உப உளவு நிறுவனம் 96 பேரை கன்காணிக்க ஜூன் 19 ல் அறிக்கை அளித்ததை சுட்டிக்காட்டிய அண்ணாமலை, அதில் 89 வது நபராக முபீன் உள்ளார் என்றும், அவரை கண்காணிக்க காவல்துறைக்கு அறிவுறுத்தியும், அதை காவல்துறை அலட்சியப்படுத்தியது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.
இதனை சிலிண்டர் விபத்து என இதுவரை காவல்துறை சொல்லிவருவது ஏன் என்று கேள்வி எழுப்பிய அண்ணாமலை, குண்டு வெடி விபத்து என்றால் மக்கள் எச்சரிக்கையாக இருப்பார்கள் என்றும், மக்களை எச்சிரிக்கை படுத்துவது காவல்துறையின் தலையாய பணி என்றும் தெரிவித்தார்.
மேலும் படிக்க | கமலால் கடனாளி ஆனேனா?
மக்கள் சுதாரிப்பதற்காகவே சொல்லி வருகிறோம். ஐ எஸ் ஐ எஸ் தவறானவர்கள் என இஸ்லாம் மத குருமார்களே சொல்கிறார்கள் என்று கூறிய அண்ணாமலை, சில இடங்களில் சிஸ்டமிக் ஃபெயிலியர் ஆகியுள்ளது என்றாலும் தமிழக காவல்துறையை பாராட்டியாக வேண்டும் என்று தெரிவித்தார்.
ஜூன் 19 ல் குறிப்பாக ஒரு மனிதனின் பெயரை குறிப்பிட்டு, அவரை கண்காணிக்க சொல்லும்போது, அவரை கண்காணிக்க வேண்டிய பணி என்பது, காவல்துறையின் அனைத்து பணியாளர்களுக்கும் உள்ளது. ஆனால் அதை செய்யாதது சிஸ்டமிக் ஃபெயிலியர் என்று அண்ணாமலை சாடினார்.
செப்டம்பர் வரை இன்லஜென்ஸ் சீப் இல்லை என்று சுட்டிக்காட்டிய அண்ணாமலை, அடுத்த கட்ட தாக்குதல் நடத்த கூடாது என்பதற்காக மட்டும் தான், இவ்வளவு விளக்கமாக பேசுவதாக தெரிவித்தார்.
ஒரு வாரம் முன்பு தான் என் ஐ ஏ அலுவலக அந்தஸ்து கொடுக்கப்பட்டது, மத்திய உளவு பிரிவு என்ன தகவல்களை கொடுத்தாலும்,அவற்றை கள அளவில் செயல்படுத்த வேண்டியது இங்குள்ள காவல்துறை குழு தான் என்பதால், காவல்துறையினர் கவனமாக செயல்பட வேண்டும் என்று, கோவை செய்தியாளர் சந்திப்பில் பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை கேட்டுக் கொண்டார்.
மேலும் படிக்க | தேர்வில்லாமலேயே ராணுவத்தில் சேரலாம்! பட்டதாரிகளுக்கு அருமையான வேலைவாய்ப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ