அண்மையில் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாஜக நான்கு இடங்களை வெல்ல காரணமாக இருந்ததற்கு,  வெகுமதியாக தமிழ்நாடு பாஜக (BJP) தலைவராக இருந்த எல்.முருகன் (L.Murugan) அவர்கள் பிரதமர் மோடியின் புதிய மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார். அவருக்கு தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழக பாஜகவின் புதிய தலைவராக குப்புசாமி அண்ணாமலை நியமனம் செய்வதாக, பாஜகவின் தேசிய தலைவர் ஜேபி நட்டா அறிவித்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நிலையில், தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட அண்ணாமலை அவர்கள், கட்சியின்‌ சித்தாந்தத்தையும்‌, உயிரான தேசப் பற்றையும்‌ மற்றும்‌ தமிழ்‌ மக்கள்‌ மீது மாண்புமிகு பிரதமர்‌ கொண்டுள்ள பேரன்பையும்‌ தமிழ்நாட்டின்‌ ஒவ்வொரு வீட்டிற்கும்‌ எடுத்துச்‌ செல்லும்‌ வரை‌ ஓய மாட்டோம்‌ என உறுதிமொழி எடுத்துள்ளார்.


இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், நமது தேசியத்‌ தலைவர்‌ திரு.ஜே.பி.நட்டா அவர்கள்‌ எனக்கு வழங்கி இருக்கும்‌ தமிழக பாஜகவின்‌ தலைவர்‌ எனும்‌ பொறுப்பு என்னை பணிவும்‌, பெருமையும்‌ கொள்ள செய்கிறது. நம்‌ கட்சி பல ஆண்டுகளாக பல காரியகர்த்தாக்களின்‌ உயிர்‌ தியாகங்களாலும்‌ மற்றும்‌ பல தன்னலமற்ற தலைவர்களின்‌ தியாகங்களாலும்‌ வழிநடத்தப்பட்டுள்ளது.


ALSO READ | Tamil Nadu BJP Head: தமிழக பாஜகவின் தலைவரானார் அண்ணாமலை

தமிழ்நாட்டில்‌ உள்ள நம்முடைய கட்சியின்‌ மூத்த தலைவர்களின்‌ வழிகாட்டுதலுடன்‌, ஒரு அணியாக, நாம்‌ அனைவரும்‌ ஒன்றிணைந்து, தேசிய தலைமை என்மீது வைத்துள்ள நம்பிக்கையை போற்றும்‌ விதமாக உறுதியுடன்‌ நடப்போம்‌.


அழகான மாநிலமான நம்‌ தமிழ்நாடு மாண்புமிகு பிரதமர்‌ திரு. நரேந்திர மோடி அவர்களின்‌ தமிழ்‌ பற்றும்‌, நமது தமிழ்‌ பண்பாடு மீது அவர்‌ கொண்டுள்ள பெருமையும்‌ அனைவருக்கும்‌ தெரியும்‌. நம்முடைய கட்சியின்‌ சித்தாந்தத்தையும்‌, உயிரான தேசப் பற்றையும்‌ மற்றும்‌ தமிழ்‌ மக்கள்‌ மீது மாண்புமிகு பிரதமர்‌ கொண்டுள்ள பேரன்பையும்‌ தமிழ்நாட்டின்‌ ஒவ்வொரு வீட்டிற்கும்‌ எடுத்துச்‌ செல்லும்‌ வரை நாங்கள்‌ ஓய மாட்டோம்‌. ஜெய்‌ ஹிந்த்‌…வாழ்க பாரதம்‌…வளர்க தமிழ்நாடு, என தெரிவித்துள்ளார்.


ALSO READ | மத்திய அமைச்சர் பதவியும் - அந்த 4 இடங்களும்; எல். முருகன் கடந்து வந்த பாதை!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR