கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், திமுகவின் பல்லாவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் வீட்டில் வேலை பார்த்த பெண் இன்று ஊடகங்களிடம் பேசி இருக்கின்றார். பட்டியல் சமூகத்தை சேர்ந்த அவரை சிகரெட்டால் சூடு வைத்தார் என்றும், 16 ஆயிரம் ரூபாய் சம்பளம் கொடுப்பதாக சொல்லிவிட்டு ஐந்தாயிரம் ரூபாய் மட்டுமே சம்பளமாக கொடுத்தாகவும் தெரிவித்து இருக்கின்றார் எனறும் திமுக எம்எல்ஏவின் மகன் வீட்டில் இது நடந்துள்ளது. இது தொடர்பாக இன்னும் முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்யப்படவில்லை என்றும் பா.ஜ.க சார்பில் இதனை வன்மையாக கண்டிப்பதாகவும் கூறினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | நாடு தற்போது ராமர் மயமாகி வருகிறது - ஆளுநர் ஆர்என் ரவி பேட்டி!


தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்படவுள்ளதாகவும், கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை பிரதமர் துவக்கி வைக்கிறார். பிரதமர் ராமாயணம் மற்றும் ராமர் தொடர்புடைய இடங்களுக்கு சென்று கொண்டிருப்பதாகவும், அந்த வகையில் ஸ்ரீரங்கம்,  ராமேஸ்வரம் செல்கிறார். அயோத்தி ராமர் கோவில் குறித்து பேச உதயநிதி ஸ்டாலினுக்கு தகுதி இல்லை எனவும், திமுக ஆட்சிக்கு வந்த பின் கோவில்களை இடித்து பின்னர் மக்களிடம் இருந்து பெரிய எதிர்ப்பு வந்த பின் இடிப்பதை  நிறுத்தி வைத்துள்ளனர் என்றும் கூறினார். உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்த பின்னர், நீதிமன்ற அனுமதி கொடுத்து தான் ராமர் கோவில் கட்டப்படுகிறது, உதயநிதி ஸ்டாலின் வரலாற்றை தெரிந்து கொண்டு பேச வேண்டும் என்று அறிவுறுத்தினார். 


2ஜி வழக்கில் என்ன நடந்து இருக்கிறது என்ற டேப் வெளியிட்டு இருக்கிறோம். திமுக இந்த டேப்பிற்கு பதில் சொல்ல வேண்டும். முதல்வரின் தனிப்பட்ட உதவியாளரும் இந்த டேப்பில் பேசி இருக்கிறார். மக்கள் மன்றத்தில் 9 டேப்பை வைத்த பின்பு விரிவாக பேசுகிறோம் என்றும் அண்ணாமலை தெரிவித்தார். மேலும், எனக்கு முதல்வர் கனவே இல்லை என்றும் கட்சியை வளர்ப்பது, தலைவர்களை உருவாக்குவது மட்டுமே என் முதன்மையான பணி் என்று கூறினார் அவர். நாடாளுமன்ற தேர்தலை பொறுத்த வரை பாஜகவின் பக்கம் மிகப்பெரிய எழுச்சி இருக்கும் எனவும், மீண்டும் பிரதமராக மோடி நிச்சயம் வருவார் என அண்ணாமலை கூறினார்.


தேர்தல் அறிவிப்பு வரவில்லை எனபதால் தேர்தல் கூட்டணி குறித்து அதற்கான குழு பார்த்து கொள்வார்கள் என கூறிய அண்ணாமலை, 32 மாத ஆட்சியில் என்ன செய்தோம் என்பதை மக்களிடம் சொல்ல திமுக-வால் முடியவில்லை எனவும், 1950ல் இருந்து மாநில உரிமையை தவிர வேறு எதையாவது திமுக பேசி இருக்கின்றதா என்றும் கேள்வி எழுப்பினார். மாநில உரிமையை மீட்டு எடுப்பது என்பது திமுகவை பொறுத்தவரை வெறும் வாய்சொல் தான், ஆ.ராசா உரையாடல் டேப்பும் 3 வாரங்களில் வெளியிடப்படும் என அண்ணாமலை தெரிவித்தார்.


மேலும் படிக்க | கிளாம்பாக்கத்திற்கு வரவே வேண்டாம்... மின்சார ரயிலில் சிட்டிக்குள் வர இந்த இடத்தில் இறங்கவும்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ