ஒன்றியம் Vs கொங்கு நாடு... தனி மாநிலம் சாத்தியமா..!!!
தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் அவர்கள், மத்திய இணை அமைச்சராக நியமிக்கப்பட்டது தொடர்பாக அறிவிக்கப்பட்ட செய்தியில், கொங்கு நாடு - தமிழ் நாடு என குறிப்பிடப்பட்டிருந்து.
நேற்று தினமலர் செய்தித்தாளில், முதல் பக்கத்தில் வெளியான, “கொங்கு நாடு! தனி யூனியன் பிரதேசமாகிறது” என்ற செய்தி தமிழ் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டில், மேற்கு பிரதேசமும், தெற்கு பிரதேசமும் புறக்கணிக்கப்படுவதாக தொடர்ந்து பல காலங்களாக குற்றசாட்டு வைக்கப்பட்டு வரும் நிலையில், இந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மத்திய அரசை ‘ஒன்றிய அரசு’ என கூறி திமுக மேற்கொள்ளும் மோதல் போக்கினால், இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்வதாக செய்திகள் வெளியானது. தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் அவர்கள், மத்திய இணை அமைச்சராக நியமிக்கப்பட்டது தொடர்பாக அறிவிக்கப்பட்ட செய்தியில், அவரது விபரங்களை குறிப்பிடுகையில், அதில் கொங்கு நாடு - தமிழ் நாடு என குறிப்பிடப்பட்டிருந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
கொங்கு நாடு கோரிக்கை என்பது இன்று எழுந்த கோரிக்கை அல்ல. இது பல காலமாக வைக்கப்படும் கோரிக்கை. ஜெய்ஹிந்த் பிரச்சனையை கிளப்பிய எம்.எல்.ஏ கொங்கு ஈஸ்வரனே, கடந்த காலங்களில் இந்த கோரிக்கையை முன் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது தமிழக பாஜக தலைவர்களும், கொங்கு நாடு தனி மாநில கோரிக்கையை ஆதரிக்கின்றனர். மக்களின் கோரிக்கைகள் அடிப்படையில்தான் பல மாநிலங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. இதற்கான சமீபத்திய உதாரணம் தெலுங்கானா தனி மாநிலம். இதில் தெலுங்கானா தனி மாநிலம் உருவாக, அப்போதையை ஆந்திர பிரதேச சட்ட பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதிலும், மக்கள் கோரிக்கை வலுப்பெற்றதை அடுத்து, தெலுங்கானா என்னும் தனி மாநிலம் உருவானது. அதே போல், வாஜ்பாய் ஆட்சி காலத்தில், உத்திரபிரதேசம், மத்திய பிரதேசம், பிகார் மாநிலங்களில் இருந்து, உத்திராகண்ட், சத்திஸ்கர், ஜார்கண்ட் மாநிலங்கள் உருவாக்கப்பட்டன.
மேலும், திறமையான நிர்வாக காரணங்களுக்காகவும், வளர்ச்சி மற்றும் மேம்பாட்ட்டிற்காகவும், மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளை மறுவரையறை செய்வது, போன்ற திட்டங்களை பாஜக பல காலங்களாக தெரிவித்து வருகிறது.
ALSO READ | தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான நிகழ்ச்சிகள் ரத்து; காரணம் என்ன..!!
இந்நிலையில், தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களை பிரித்து கொங்கு நாடு என்ற தனி மாநிலம் உருவாக்குவது தொடர்பான பரிசீலனை தொடக்க நிலையில் உள்ளது என பாரதிய ஜனதா கட்சியின் (பா.ஜ.க) தமிழக பொதுச்செயலாளர் கரு. நாகராஜன் வேறு இன்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து கருத்து கூறிய பாஜகவை சேர்ந்த கரு.நாகராஜன், அந்த பகுதி மக்கள் என்ன விரும்புகிறார்களோ அதை நிறைவேற்ற வேண்டியது அரசின் கடமை என்றும் பெரும்பான்மை மக்களின் விருப்பம் என்பது நாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று என்றும், கொங்குநாடு தனி மாநிலம் என்பது குறித்த மத்திய அரசின் பரிசீலனை தொடக்க நிலையில் உள்ளது எனவும் கரு. நாகராஜன் கூறியுள்ளார்.
தனி மாநிலம் அமைய, சம்பந்தட்ட மாநிலத்திடம் மத்திய அரசு கருத்து கேட்கலாமே தவிர, நிர்வாக காரணங்களுக்காக பிரிக்க மாநில அரசின் அனுமதி தேவையில்லை என்றே அரசியலமைப்பு சட்டம் கூறுகிறது. ஒரு மாநில சட்டசபையின் ஒப்புதல் இல்லாமலேயே ஒரு மாநிலத்தைப் பிரிக்க இயலும். குடியரசுத் தலைவரின் அதிகாரத்தில் அந்த முடிவு எடுக்கலாம். மாநிலத்தின் ஒரு பகுதியைப் பிரிக்கும் கோரிக்கைக்கு மக்களின் ஆதரவு மட்டுமே தேவை என சட்ட விதிகள் கூறுகின்றன.
ALSO READ | COVID-19 Update: தமிழகத்தில் 3000-க்கும் கீழே குறைந்த பாதிப்பு, 49 பேர் இறப்பு
கடந்த தேர்தலில், திமுக வெற்றி பெற்ற நிலையில், மேற்கு மாவட்டங்கள் அடங்கிய கொங்கு மண்டத்தில், திமுக வெற்றி பெற வில்லை என்பதால், கொரோனா இரண்டாம் அலையில் அதிகம் பாதிக்கப்பட்ட மேற்கு மாவட்டங்களுக்கு தடுப்பூசி வழங்குவது முதல், பல விதங்களில் பாரபட்சம் காட்டப்படுவதாக புகார் எழுந்தது. இதை அடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த மே மாத இறுதியில், தமிழக முதல்வர் கொங்கு மண்டலத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில், #GoBackStalin ட்விட்டரில் ட்ரெண்ட் ஆனது குறிப்பிடதக்கது.
ALSO READ | ட்விட்டரில் ட்ரெண்ட் ஆன #GoBackStalin; காரணம் என்ன
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR