தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான நிகழ்ச்சிகள் ரத்து; காரணம் என்ன..!!

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் திடீரென்று ரத்து செய்யப்பட்டதால் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 11, 2021, 09:54 AM IST
தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான நிகழ்ச்சிகள் ரத்து; காரணம் என்ன..!! title=

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் திடீரென்று ரத்து செய்யப்பட்டதால் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

முதல்வராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்றதிலிருந்து, தினமும் தலைமை செயலகத்திற்கு தவறாமல் வருவது வழக்கமாக கொண்டிருந்த நிலையில், திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.  தினகும் தலைமை செயலகத்திற்கு வந்து, அங்கே நிகழ்ச்சிகளை முடித்து விட்டு மதிய உணவுக்காக அவர் வீட்டிற்கு சென்றுவிடுவார்.

பின்னர் மாலை நேரத்தில் மீண்டும் தலைமை செயலகத்திற்கு வந்து பணியாற்றும் அவர், இரவு நேரம் வரை பணிகள் அனைத்தையும் முடித்து விட்டு வீட்டிற்கு செல்வது வழக்கம்.  மேலும், தமிழக பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளதால் தினமும் இரண்டு  ஆய்வு பணிகளையும் மேற்கொண்டு வருகிறார்.

ALSO READ | Today Update: தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாக கோவிட் பாதிப்பு நிலவரங்கள்

இந்த நிலையில் நேற்று காலை 10.15 மணிக்கு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, வேளாண் துறை ஆகிய துறைகள் தொடர்பான ஆய்வு கூட்டங்களை நடத்த முதல்வர் மு.க ஸ்டாலின் திட்டமிட்டிருந்தார். அதே போன்று நேற்று பொது நிவாரண நிதி, நிதியுதவி அளிப்பது தொடர்பான கூட்டம் ஒன்றிலும் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்வதாக இருந்தது

ஆனால் நேற்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமை செயலகம் வரவில்லை. இதை அடுத்து, அவர் தலைமையில் நடைபெற இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன. முதல்வருக்கு உடல்நிலை சிறிது சரியில்லை எனவும் உடல் சோர்வின் காரணமாக வரவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. எனினும் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

ALSO READ | COVID-19 Update: தமிழகத்தில் 3000-க்கும் கீழே குறைந்த பாதிப்பு, 49 பேர் இறப்பு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News