10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது தேர்வுத்துறை
இதுவரை நடத்தாத பாடங்களை விரைந்து நடத்தி முடிக்கும்படி, தேர்வுத்துறை பள்ளிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு ஒரு முக்கிய செய்தி. 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ஏற்கனவே குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் படியே நடைபெறும் என்றும், குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே வினாத்தாள்கள் தயாரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை நடத்தாத பாடங்களை விரைந்து நடத்தி முடிக்கும்படி, தேர்வுத்துறை பள்ளிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து தேர்வுத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில், 2021-2022 ஆம் கல்வியாண்டுக்கு, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் வழங்கப்பட்ட குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படியே மேல்நிலை இடைநிலைப் பள்ளி விடுப்புச் சான்றிதழ் பொதுத்தேர்வு, மே 2022- க்கான வினாத்தாள்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | உலகிலேயே அதிக உயரம் கொண்ட முத்துமலை முருகன் சிலைக்கு கும்பாபிஷேகம்
மேலும், அறிக்கையுடன் இணைக்கப்பட்டுள்ள பாடத்திட்டம் அனைத்து பள்ளிகளுக்கும் வழங்கப்பட வேண்டும் என்றும் பாடங்களை விரைந்து முடிக்க அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் உரிய அறிவுரைகள் வழங்கப்பட வெண்டும் என்றும் தேர்வுத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக, மாணவர்களின் பள்ளி படிப்பில் பல வித மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பள்ளிகளில் வகுப்புகள் நடக்கும் முறையிலும் தேர்வு முறைகளிலும் முன்னர் இல்லாத பல புதிய வழிமுறைகளும் செயல்முறைகளும் இணைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிட்டத்தக்கது.
மேலும் படிக்க | பண மழை கொட்டும் அதிஷ்ட கல் : கடுப்பான கடவுள்..!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR