புதுடெல்லி: மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான டேர்ம்-2 போர்டு தேர்வு ஏப்ரல் 26ம் தேதி தொடங்குகிறது. 2022ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்வுகள் இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் என்று கடந்த ஆண்டு சிபிஎஸ்இ அறிவித்திருந்தது. அத்துடன் இம்முறை தேர்வு நேரங்கள் காலை 10:30 மணி முதல் நடத்தப்படும் என்றும் இந்த தேர்வுகள் இரண்டு ஷிப்டுகளில் நடத்தப்படாது என்றும் வாரியம் தெரிவித்துள்ளது.
இரண்டாம் பருவத்தேர்வு ஏப்ரல் 26-ம் தேதி தொடங்குகிறது
இதன் கீழ், சிபிஎஸ்இ பருவம்-1 தேர்வு ஏற்கனவே நடத்தப்பட்டுள்ள நிலையில், பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்புக்கான இரண்டாம் நிலை தேர்வு ஏப்ரல் 26ம் தேதி முதல் நடத்தப்படுm என்றும் கூறப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை தேதி தாளை வெளியிடும் போது, கொரோனா தொற்றுநோய் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதை மனதில் வைத்து இரண்டு தேர்வுகளுக்கு இடையில் இடைவெளி வைக்கப்பட்டுள்ளதாக வாரியம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | CBSE 2ஆம் பருவத் தேர்வுகள் இந்த தேதியில் தொடங்கும், ஆஃப்லைன் முறையில் நடைபெறும்
முக்கிய விவரம்
வாரியம் பிறப்பித்த உத்தரவில், தொற்றுநோய் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால், மாணவர்களின் படிப்பில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது, இதனால் இரு வகுப்புகளிலும் கிட்டத்தட்ட அனைத்து பாடங்களிலும் இரண்டு தேர்வுகளுக்கும் போதிய கால இடைவெளி உள்ளது. தேதி தாளைத் தயாரிக்கும் போது, ஜேஇஇ மெயின் உள்ளிட்ட பிற தேர்வுகளை மனதில் வைத்தே தயாரிக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
10 ஆம் வகுப்பு தேதி தாளை இங்கே பார்க்கவும்
12 ஆம் வகுப்பு தேதி தாளை இங்கே பார்க்கவும்
அப்ஜெக்டிவ் மற்றும் சப்ஜெக்ட்டிவ் கேள்விகள் இருக்கும்
ஆப்ஜெக்டிவ் மற்றும் சப்ஜெக்டிவ் வகையிலான கேள்விகளுக்கு ஆஃப்லைனில் தேர்வு நடத்தப்படும் என்று வாரியம் தெரிவித்துள்ளது. சிபிஎஸ்இ அதிகாரப்பூர்வ வலைத்தளமான cbse.gov.in இல் கூடுதல் தகவல்களை மாணவர்கள் காணலாம்.
மேலும் படிக்க | Advisory: மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த CBSE! காரணம் இதுதான்!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR