தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் தலைமையில் நடைபெற்று வருகிறது. சட்டமன்ற வரலாற்றிலேயே முதல் முறையாக காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முதலமைச்சர் மு க ஸ்டாலின் சந்தித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

10 மணியிலிருந்து கலைவாணர் அரங்கில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வந்தது. பட்ஜெட்டில் அடங்கியுள்ள பல்வேறு முக்கிய அம்சங்களை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டு வருகிறார்.


பட்ஜெட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக மதுரை மற்றும் கோவையிலும் மெட்ரோ ரயில் திட்டம் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். விரைவில் அதற்கான அறிக்கைகள் தயார் செய்யப்படும் என்று கூறினார்.


கோவை மாவட்டத்தை பொறுத்தவரை மெட்ரோ ரயில் சேவை தொடங்குவது தொடர்பாக ஒன்றிய அரசிடம் கலந்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார்.


இதுதவிர சென்னை விமான நிலையத்தில் இருந்து தாம்பரம் வழியாக மெட்ரோ ரயில் சேவையை நீட்டிக்கும் பணி விரைவில் ஆரம்பிக்கப்படும். சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட திட்ட பணிகள் 2026 இல் முடிக்கப்படும் என்று கூறினார்.


பத்து வருடத்திற்கு பிறகு ஆட்சி அமைத்த திமுக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அதுமட்டுமில்லாமல் முதல் முறையாக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின் தலைமயில் தாக்கல் செய்யப்பட்ட முதல் பட்ஜெட் இதுவாகும். மேலும் முதல் முறையாக எலக்ட்ரானிக் வடிவிலான முதல் நிதிநிலை அறிக்கை சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த இ-பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR