தமிழக பட்ஜெட் 2022: வட்டியில்லா பயிர்க்கடன் திட்டத்திற்கு ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு
2022- 23 நிதியாண்டிற்கான தமிழ்நாடு பட்ஜெட்டில் வட்டியில்லா பயிர்க்கடன் திட்டத்திற்கு 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2022-23 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் பயிர்க்கடன் தள்ளுபடிக்காக 2,531 கோடி ரூபாயும், நகைக்கடன் தள்ளுபடிக்காக 1,000 கோடி ரூபாயும், சுய உதவிக்குழுக்களின் கடன்கள் தள்ளுபடிக்காக 600 கோடி ரூபாயும் என இம்மதிப்பீட்டில் மொத்தம் 4,131 கோடி ரூபாய் அளவிலான நிதியை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | TN Budget 2022: மாற்றுத்திறனாளி உதவித்தொகை உயர்வு
இந்த நிதியாண்டில், இதுவரை 14லட்சத்து15ஆயிரத்து 916 விவசாயிகளுக்கு 9,773 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பயிர்க்கடன்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும்; இதில், 10லட்சத்து76ஆயிரத்து96 குறு, சிறு விவசாயிகளுக்கு 7,428 கோடி ரூபாய் மதிப்பில் வழங்கப்பட்ட பயிர்க்கடன்களும் அடங்கும் என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க | தமிழ்நாடு பட்ஜெட் 2022: இளைஞர் நலன் மற்றும் செஸ் ஒலிம்பியாட் எவ்வளவு ஒதுக்கீடு
நாட்டிலேயே முதல்முறையாக முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட வட்டியில்லா பயிர்க்கடன் திட்டத்திற்கு, இந்த பட்ஜெட்டில் 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR