சென்னை: சமீபத்தில் நடந்துமுடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சிப்பொறுப்பேற்றது. கொரோனா தொற்று பரவல் உச்சியில் இருந்தபோது ஆட்சிக்கு வந்த திமுக அரசு, பல கட்ட ஊரடங்குகள் மற்றும் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மூலம் தொற்றை கட்டுக்குள் கொண்டு வர பல முயற்சிகளை எடுத்து வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பல துறை அமைச்சர்களும் தங்கள் துறைகளில் பல முன்னேற்றப் பணிகளையும் சீர்திருத்தப் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். 


இன்னும் சில வாரங்களில் தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) தலைமையிலான திமுக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த பட்ஜெட் குறித்து மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.


திமுக தாக்கல் செய்யவுள்ள பட்ஜெட்டில், தேர்தல் அறிக்கையில் அக்கட்சி அளித்துள்ள பல வாக்குறுதிகள் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பட்ஜெட்டில் இடம்பெறும் அறிவிப்புகள் ஒருபுறம் இருக்க, பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் முறையே புதுமையாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


ALSO READ: PMK:2021 - 2022ஆம் ஆண்டின் பொது நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டது 


இதற்கிடையில், சட்டப்பேரவையில் மின்ன‌னு முறையில் பட்ஜெட் தாக்கல் (Budget) செய்யப்படும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். சட்டமன்ற விதிகள் குழுவின் முதல் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு இதை தெரிவித்தார்.  


“தமிழக சட்டப்பேரவையில் மின்ன‌னு முறையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். சட்டப்பேரவை நடவடிக்கைகளை காகிதம் இல்லாத முறையில் மேற்கொள்ள அரசு திட்டமிட்டுள்ளது. திமுக அரசுதான் தொழில்நுட்பத்தை அதிகம் பயன்படுத்தி வருகிறது” என்று சபாநாயகர் அப்பாவு (TN Speaker Appavu) கூறினார். 


அடுத்த மாதம் தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த பட்ஜெட் தொடர்பாக புதிதாக பொறுப்பேற்றிருக்கும் திமுக அரசின் மீது மக்களுக்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது. ஏற்கனவே கொரோனா பெருந்தொற்றால் மக்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆகையால், அரசு தாக்கல் செய்யவுள்ள பட்ஜெட் மக்களின் சுமையை அதிகரிக்காத வண்ண இருக்க வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள். 


அதே சமயம், அரசுக்கும் கொரோனா தொற்றால் நிதி தட்டுப்பாடு உள்ளது. இந்த நிலையில், அனைவருக்கும் திருப்தி அளிக்கும் வகையில் ஒரு பட்ஜெட்டை தாக்கல் செய்வது அரசுக்கும் சவாலான விஷயமாகத்தான் இருக்கும். 


ALSO READ: மேகதாது அணை விவகாரம்; தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தில்லி பயணம் 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR