தமிழக சட்டசபை (TN Assembly) முதல் கூட்டம் இன்று கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றனர். பின்னர் சட்டப்பேரவையில் யார் சபாநாயகராகத் தேர்வு செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துவந்த நிலையில் தற்போது ராதாபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் அப்பாவு தேர்வு செய்யப்படுகிறார்.
இவருக்கு தமிழக சட்டப்பேரவை (TN Assembly) நிகழ்வுகளில் நீண்ட அனுபவம் உண்டு. தென் மாவட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்ற அடிப்படையில் திமுக சார்பில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடந்த திமுக (DMK) ஆட்சியில் சபாநாயகராக இருந்த ஆவுடையப்பன் இந்தமுறை போட்டியிட்டு தோல்வியடைந்துள்ளார்.
சட்டப்பேரவை துணை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுகிறார் கீழ்பெண்ணாத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் கு.பிச்சாண்டி. இவர் தற்போது 6வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இருவரும் நாளை மறுநாள் மனுதாக்கல் செய்யவுள்ளனர். வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் மதியம் 12 மணியுடன் முடிந்ததால் 2 பேரும் போட்டியின்றி தேர்வாகியுள்ளார்.
விவசாயிகளின் உரிமைகளுக்காக அப்பாவு பிரச்சாரம் செய்தவர். விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச விலைக் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டியதன் அவசியம் குறித்து நீதிமன்றத்தில் பேசியுள்ளார். பெப்சி மற்றும் கோகோ கோலா நிறுவனங்கள் தாமிரபரணி ஆற்றில் இருந்து நீர் எடுப்பதற்கு எதிராக பிரச்சாரம் செய்தார் ராதாபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் அப்பாவு.
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR