புது டெல்லி: பருவமழை தொடங்கியதால், வெள்ளம் மற்றும் COVID-19 காரணமாக ஒரு மக்களவை மற்றும் ஏழு சட்டமன்ற இடங்களுக்கான இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் (Election Commission of India) ஒத்திவைத்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இடைத்தேர்தல் (By-Election) நடைபெறவிருந்த பீகார் (வால்மீகி நகர் மக்களவை), தமிழ்நாடு மற்றும் உத்தரப்பிரதேசம் (தலா இரண்டு சட்டமன்ற இடங்கள்), அசாம், மத்திய பிரதேசம் மற்றும் கேரளா (தலா ஒரு சட்டமன்ற தொகுதி) ஆகிய மாநிலங்களில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


ஒரு தேர்தல் அதிகாரி கூறுகையில், தொற்றுநோய்களின் போது இடைத்தேர்தல்களை நடத்துவது பொது சுகாதார பிரச்சினைகளுக்கு நல்ல முடிவு அல்ல என்று ஆணையம் முடிவு செய்துள்ளது. வரவிருக்கும் பருவமழை மற்றும் வெள்ள நிலைமையைக் கையாள்வதில் மாவட்ட அளவிலான அதிகாரிகள் மும்முரமாக இருப்பதால், இந்த நேரத்தில் இடைத்தேர்தல்களை நடத்துவது நல்லது என்று அந்த அதிகாரி குறிப்பிட்டார்.


தேர்தல் சட்டவிதிபடி, ஒரு இடம் காலியாகி 180 நாட்களுக்குள் (ஆறு மாதங்களுக்குள்) இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் நடத்த வேண்டும் என்பது விதி.


ALSO READ |  கொரோனா, வெள்ளம் காரணமாக தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் இடைத்தேர்தல் தள்ளி வைப்பு


காலியாக உள்ள எட்டு இடங்களில் இடைத்தேர்தல் நடத்த ஆறு மாத காலக்கெடு முறையே ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் வெவ்வேறு தேதிகளில் முடிவடைந்தது.


தேர்தல் ஆணையம் (Election Commission of India) நிலைமையை மதிப்பிட்டபோது, இந்த இடங்களில் ஆறு மாத காலக்கெடுவை கடைப்பிடிப்பது கடினம் என்பதை உணர்ந்து, தேர்தல்களை ஒத்திவைக்க மத்திய சட்ட அமைச்சகத்தை அணுகியது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 இன் கீழ், மத்திய அரசு (மத்திய சட்ட அமைச்சகம்) உடன் கலந்தாலோசித்து, தேர்தல் ஆணையம், ஆறு மாத காலத்திற்குள் இடைத்தேர்தலை நடத்துவது கடினம் என்று கூறியது.


இதன் பிறகு இடைத்தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. எட்டு தொகுதிகளின் இடைத்தேர்தல் நடத்த 2020 செப்டம்பர் 7 வரை மட்டுமே சட்டப்படி கால அவகாசம் உள்ளது. அதன்பிறகு நிலைமை சரியானால், இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு உள்ளது. 


இந்தநிலையில், இடைத்தேர்தல் நடக்க வேண்டிய மொத்தமுள்ள எட்டு தொகுதிகளில், இரண்டு தொகுதிகள் தமிழ் நாட்டில் உள்ளது. குடியாத்தம் (Gudiyattam) மற்றும் திருவெற்றியூர் (Tiruvottiyur) காலியாக உள்ளது. இந்த இரண்டு சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்துவதற்கான முதற்கட்ட பணிகளை தொடங்கிவிட்டதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு (Sathya Pratha Sahoo) தகவல் தெரிவித்துள்ளார்.


ALSO READ |  உங்களிடம் 2 வாக்காளர் அட்டைகள் உள்ளதா? எச்சரிக்கையாக இருங்கள்!!


அதாவது செப்டம்பர் 7 ஆம் தேதிக்குப் பிறகு, இடைத்தேர்தல் குறித்து அறிவிப்பு வெளியானால், அதனை நடத்த தயார் நிலையில் இருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார். மேலும், இரண்டு சட்டப்பேரவை தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்ப்பது போன்ற பணிகளை துவங்கிவிட்டதாகவும் அவர் மேலும் கூறினார்.


குடியாத்தம் தொகுதி எம்.எல்.ஏ காத்தவராயன், திருவெற்றியூர் தொகுதி எம்.எல்.ஏ கே.பி.பி சாமி ஆகியோர் மறைவைத் தொடர்ந்து, அந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.