தமிழகம், புதுச்சேரியில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில்,கட்சித் தலைவர்கள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த தேர்தலில் அதிமுக (ADMK)  பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. அக்கூட்டணியில், பாமக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் இடம்பெற்றுள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தேர்தல் பிரச்சாரத்தில், அயராமல் தொடர்ந்து சூறாவளிப்பயணம் மேற்கொண்டு வரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, (Edappadi K Palanisamy) அனல் பறக்கும் பிரச்சாரம் செய்து வருகிறார்.  சில நேரங்களில் திமுகவை கேலி கிண்டல் செய்து, சில நேரங்களில் குற்றம் சாட்டும் எதிர்கட்சியினருக்கு எதிராக ஆவேசமான கருத்துகளை முன் வைத்து, கடும் பதிலடி கொடுத்து பிரசாரம் செய்கிறார். அவரது தொண்டை கட்டிக்கொண்ட போதிலும், பிரசாரத்தில் தொடர்ந்து வருகிறார்.


அந்நிலையில், இன்று திருப்பத்துர்ர், சிவகங்கை, மானாமதுரை, அருப்புகோட்டை, விருது நகர் ஆகிய இடங்களில் பிரச்சாரம் செய்கிறார். 


இன்றையை பிரச்சாரத்தில், எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு சவால் விட்ட எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக கட்சி ஊழல் கட்சி என தொடர்ந்து குற்றம் சாட்டுகிறார், அவர் என்னுடன் விவாதம் செய்ய தயாரா?  நாங்களே இடத்தை தேர்வு செய்து மேடை அமைத்து தருகின்றேம், வாருஙக்ள் பேசலாம், . இருவரும் நேருக்கு நேர் விவாதிக்கலாம். என சாவால் விடுத்துள்ளார். 


மேலும் அவர், கூறுகையில், அறிவுப்பூர்வமாக சிந்திக்கும் மக்களிடம் உங்கள் பொய்கள் எதுவும் எடுபடாது, குற்றச்சாட்டுகளில் உண்மை, பொய் எதுவென்று அறிந்து மக்கள் சரியான தீர்ப்பு வழங்குவார்கள். மக்கள் தீர்ப்பே, மகேசன் தீர்ப்பு என அவர் கூறினார்



ALSO READ | அதிமுக ஆட்சி அடிமை ஆட்சி என்ற வாதத்தை தகர்த்தெறிந்த எடப்பாடி


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR