சென்னை: தமிழக (Tamil Nadu) அரசியல் வரலாற்றில், நம் மாநிலத்தை ஆட்சிசெய்தவர்கள் பலர் இருந்தாலும், மக்கள் மனங்களை ஆட்சி செயுதவர்கள் சிலரே. அவர்களுள் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் (MGR) முதல் இடத்தில் உள்ளார் என்றே கூறலாம். மக்களுடன் இயல்பாகப் பழகும் குணம் கொண்ட அவர், மக்களை நேரடியாக சந்தித்து அவர்கள் துயர் தீர்ப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அவர் வெளியூர்களுக்குச் செல்லும் போது, வழியில் விவசாயிகளைப் பார்த்தால், அவர்களுடன் உரையாட காரிலிருந்தி இறங்கி விடுவார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முதல்வர் பழனிசாமியும் (K Palanisamy) அதே பாணியைப் பின்பற்றுவதை பல முறை நாம் பார்த்துள்ளோம்.


கொரோனா வைரஸ் (Corona Virus) காரணமாக நாடே ஸ்தம்பித்துள்ளது. பலதரப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்து மாநிலங்களிலும் எடுக்கப்பட்டு வருகின்றன. நிவாரணப் பணிகளையும், எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் ஆய்வு செய்ய, தமிழக முதல்வர் மாவட்டம் மாவட்டமாக சென்று வருகிறார்.


நேற்று திருவாரூரில் (Tiruvarur) சுற்றுப்பயணம் செய்த முதல்வர், கொரோனா முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக்கூடம் நடத்தினார். பல நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார். அதன் பிறகு, மதியம் முதல்வர் அவர்கள், தஞ்சாவூருக்குக் கிளம்பினார். திருவாரூலிருந்து தஞ்சாவூர் செல்லும் வழியில், கோயில் வெண்ணி அருகே ஆதனூர் என்ற கிராமத்தில், சாலையோரம் இருந்த வயல்களில் சில விவசாயிகள் (Farmers) களை பறித்துக்கொண்டிருந்ததைக் கண்டார் முதல்வர். அவர்களிடம், விவசாயப் பணிகள் குறித்து கலந்துரையாடினார்.


ALSO READ: தேர்தல்களின் போதுதான் கூட்டணி பற்றிய உறுதியான தீர்மானம்: EPS


விவசாயிகளிடம் தான் கலந்துரையாடிய வீடியோவை பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.



‘திருவாரூர்-கோவில்வெண்ணி அருகே உள்ள ஆதனூர் கிராமத்தில் களை எடுக்கும் பெண்களிடம் உரையாடினேன். அவர்களது நிறை குறைகளைக் கேட்டறிந்தேன். அவர்களுக்கு முகக்கவசங்களையும் வழங்கினேன்’ என்று அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார்.


மனித இனத்திற்கு உணவளிக்கும் தெய்வங்கள் விவசாயிகள். அவர்கள் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள். அரசியலில் உயரிய பதவிகளில் இருப்பவர்கள் விவசாயிகளையும் விவசாயத்தையும் பெருமைப்படுத்தி பொக்கிஷமாக பாதுகாக்க வேண்டும். அப்படி செய்யும் அரசியல்வாதிகளை மக்களும் ஆதரிக்கிறார்கள் என்பதற்கு வரலாறு சான்று!!


ALSO READ: பொதுமுடக்கம் முடியவுள்ள சூழலில் முதலமைச்சர் முக்கிய ஆலோசனை! போக்குவரத்து தொடங்குமா?