இட ஒதுக்கீட்டில் வேலைக்கு வரும் நம் பிள்ளைகளை பார்த்தாலே பாஜக கதறுகிறது - ஸ்டாலின் சரவெடி!
CM Stalin Speech In Chidambaram: இட ஒதுக்கீடு முறையில் நம் பிள்ளைகள் வேலைக்கு வருவதை பார்த்தாலே பாஜகவினர் கதறுகிறார்கள் என்றும் பிரதமர் மோடிக்கும் சமத்துவத்துக்கும் சம்பந்தமில்லை என்றும் முதல்வர் ஸ்டாலின் பேசி உள்ளார்.
CM Stalin Speech In Chidambaram: சிதம்பரம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மக்களவை தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று பரப்புரை மேற்கொண்டார். சிதம்பரம் தொகுதியில் விசிக தலைவர் திருமாவளவனும், மயிலாடுதுறை தொகுதியில் காங்கிரஸின் வழக்கறிஞர் சுதாவும் போட்டியிடுகின்றனர்.
மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் சிதம்பரத்தில் இன்று நடைபெற்ற பரப்புரை பொதுக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்," திருமாவளவனை மேஜர் ஜெனரல் என்று கலைஞர் கருணாநிதி அழைப்பார். சிதம்பரம் தொகுதியில் ஒரு சிறுத்தை வெற்றி பெற இரண்டு சிங்கங்களை அனுப்பி வைத்துள்ளேன். பிரதமர் மோடிக்கு நாட்டு மக்களின் மீதும் சமூக நீதி மீதும் அக்கறையில்லை.
பாஜக கதறுகிறது...
பிரதமர் மோடிக்கும் சமத்துவத்துக்கும் சம்பந்தமில்லை. பகையாளி நாடாக இந்தியாவை மாற்ற நினைக்கின்ற பிரதமர் மோடி பிரதமராக வரத் தேவையில்லை. இட ஒதுக்கீடு முறையில் நம் பிள்ளைகள் வேலைக்கு வருவதை பார்த்தாலே பாஜகவினர் கதறுகிறார்கள்.
பாமக பாஜக கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி, திமுக கூட்டணி கொள்கை கூட்டணி. தென்கோடியில் மக்கள் சொல்வதை காங்கிரஸ் செய்யப்போவதாக அறிக்கையில் கூறியுள்ளது. பிரதமர் மோடி மீண்டும் பிரதமரானால் ஜனநாயகம் இருக்காது. தேர்தல் ஜனநாயகம் குழித் தோண்டி புதைக்கப்பட்டுவிடும். மாநில அரசுகள் நகராட்சி நிர்வாகம் போல் ஆகிவிடும்.
மேலும் படிக்க | ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்-முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி!
பாஜகவின் ஊழல்கள்...
ஒரே நாடு ஒரே தேர்தல் என்று ஒரே, ஒரே என்று சொல்லி மோடி நாட்டை நாசமாக்கிவிடுவார். மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் ஆட்சி டெல்லியில் நடக்காது, நாக்பூரில் இருந்து ஆர்எஸ்எஸ் தலைவர் சொல்லுகிறபடி ஆட்சி நடக்கும். மோடி இப்போது புதிய வாஷிங் மெஷின் ஒன்றை வாங்கி வைத்துள்ளார். அதன் பெயர் 'மேட் பை பிஜேபி'. ஊழல் செய்தவர்கள் பிஜேபி கட்சியை சேர்ந்தவுடன் அந்த வாஷிங் மெஷினில் போட்டால், ஊழல் எல்லாம் மறைந்து கிளீன் ஆகிவிடுவார்கள்.
ஊழல் பற்றி பேசி வருகிறார் மோடி. தேர்தல் பத்திர ஊழலில் எட்டாயிரம் கோடி ரூபாய் மெகா ஊழல் செய்துள்ளார், மெகா வசூல் நடந்துள்ளது. அதுபோல் ஏழு லட்சம் கோடி ரூபாய் ஊழல் ஏற்பட்டுள்ளதாக மத்திய தணிக்கை குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மோடி அரசின் எல்லா ஊழல் ரகசியமும் வருகிற ஜூன் மாதம் தேர்தல் முடிந்து இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரும்போது வெளிவரும்.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை
தேர்தல் அறிக்கையில் அரியலூர், காட்டுமன்னார்கோயில் இடையே புதிய ரயில் பாதை கொண்டுவரப்படும், ஆத்தூர், பெரம்பலூர் அகல ரயில் பாதை கொண்டுவரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 30 வருடங்களாக மூடப்பட்டுள்ள மயிலாடுதுறை தரங்கம்பாடி ரயில் பாதை துவக்கப்படும். பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும். இது போன்ற வாக்குறுதிகள் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | கோவையில் ஐடி ரெய்டு... மருத்துவமனை ரகசிய அறையில் கட்டுக்கட்டாக பணம் - பின்னணி என்ன?
அதிக கப்பங்கட்ட கூடியவர் இபிஎஸ்...
வாய்க்கு வந்தபடி பொய் பேசி வருகிறார் பழனிசாமி. பழனிச்சாமி உயர்ந்தவரா, பேன் காற்றில் பொறி சாப்பிடும் குழந்தை கூட அதை நம்பாது. உழைத்து முன்னேறியதைப் போல எடப்பாடி பேசி வருகிறார். அவர் ஊர்ந்து சென்று முன்னேறியவர். அவர் பேசுவது வாய்ச்சவடால். இந்த வாய்ச்சவடால் பேச்சை நிறுத்திக் கொள்ள வேண்டும். பழனிச்சாமி அதிகமாக கப்பங்கட்டம் கூடியவர் என்பதால் கூவத்தூரில் ஏலம் எடுத்தார்கள்.
தான் கடைசி விவசாயி போல் பேசும் எடப்பாடி பழனிசாமி, அவர் விவசாயிகளை அழிக்க வந்த விஷ வாயுவாகும். ஜெயலலிதா ஊழல் வழக்கில் சிறை சென்றதால் இரண்டு முறை முதல்வர் ஆனவர் எடப்பாடி பழனிசாமி. மோடியிடம் அதிமுகவை எடப்பாடி பழனிச்சாமி ஒப்பந்தமிட்டுள்ளார். குடியுரிமை சட்டத்தை எதிர்த்து திமுக போராட்டம் நடத்திய போது நான், திருமாவளவன் உட்பட 8000 பேர் மீது அதிமுக அரசு வழக்குப்பதிவு செய்தது.
அரசியல் அமாவாசை இபிஎஸ்
மோடி, அமித்ஷாவிடம் தனது விசுவாசத்தை காட்டியவர் எடப்பாடி பழனிச்சாமி. இந்தியாவை இருண்ட ஆட்சி நடத்தியவர் பிரதமர் மோடி. தமிழகத்தில் இருண்ட ஆட்சி நடத்தியவர் எடப்பாடி பழனிச்சாமி. மகளிர் உரிமை திட்டத்தில் ஒரு கோடியே 15 லட்சம் பேர்களுக்கு உரிமை தொகை கொடுக்கப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத் தொகை திட்டம் கிராமங்களில் புரட்சி செய்கிறது.
'நான் முதல்வன்' திட்டத்தில் 28 லட்சம் இளைஞர்கள் பயனடைந்துள்ளார்கள். மோடி மீது உள்ள பயத்தை தவிர்க்க அரசியல் அமாவாசை எடப்பாடி பழனிசாமி எங்களைப் பற்றி பேசுகிறார். வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக நிற்கும் தொகுதிகளையும் திமுக பறித்து கைப்பற்றும். இந்தியா கூட்டணி 40க்கு 40க்கும் வெற்றி பெற செய்ய வேண்டும்" என்றார்.
மேலும் படிக்க | நாமக்கல்: ஆரத்தி எடுத்த எனக்கு திமுக வேட்பாளர் காசு கொடுக்கல - மூதாட்டி வேதனை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ