வாக்கு எண்ணிக்கை நாளில் முழு ஊரடங்கு: வேட்பாளர்கள், முகவர்களுக்கு கட்டுப்பாடு இல்லை - தமிழக அரசு
மே 2, ஞாயிற்றுக்கிழமை, தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கெண்ணிக்கை நடக்கவிருக்கும் நாளன்று தமிழகத்தில் முழுமையான ஊரடங்கு இருக்கும் என அரசு சார்பில் வெளியிடப்பட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: கொரோனா தொற்றின் வீரியம் நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்துக்கொண்டிருக்கின்றது. தமிழகத்திலும் தொற்றின் எண்ணிக்கையில் எழுச்சி ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், தொற்றை கட்டுக்குள் கொண்டு வர தமிழக அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
ஏப்ரல் 20 முதல் நடைமுறையில் இருந்த கோவிட் -19 கட்டுப்பாடுகளை மேலதிக உத்தரவுகள் வரை தமிழக அரசு தற்போது நீட்டித்துள்ளது. மே 2, ஞாயிற்றுக்கிழமை, தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கெண்ணிக்கை நடக்கவிருக்கும் நாளன்று தமிழகத்தில் முழுமையான ஊரடங்கு இருக்கும் என அரசு சார்பில் வெளியிடப்பட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், வாக்கெண்ணிக்கையில் (Vote Counting) தொடர்புடைய அதிகாரிகள், கட்சி செயற்பாட்டாளர்கள், வேட்பாளர்கள், முகவர்கள் மற்றும் உணவு சப்ளையர்கள் ஆகியோரின் நடமாட்டம் அல்லது போக்குவரத்துக்கு எந்த தடையும் இருக்காது என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை வெளியிடப்பட்ட உத்தரவில், இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரையிலான இரவு ஊரடங்கு (Lockdown) உத்தரவு எந்தவித தளர்வுகளும் இன்றி தொடரும் என்று அரசு தெரிவித்துள்ளது.
மேலும், மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்டவை தவிர அனைத்து சர்வதேச விமான பயணிகளின் நடமாட்டத்தையும் அரசாங்கம் தடை செய்தது.
ALSO READ: திட்டமிட்டப்படி மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் -சத்யபிரதா சாகு
மீன் சந்தைகள், மீன் கடைகள், சிக்கன் ஸ்டால்கள் மற்றும் பிற இறைச்சி கடைகள் சனிக்கிழமைகளில் மூடப்பட்டிருக்கும் என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. ஏப்ரல் 10 க்கு முன்னர் அனுமதி வழங்கப்பட்டிருந்தால் 50 நபர்களுடன் மத விழாக்கள் அனுமதிக்கப்படுகின்றன. இருப்பினும், எந்தவொரு மத விழாக்களிலும் பங்கேற்க பொதுமக்களை அனுமதிக்க முடியாது என்று தமிழக அரசாங்கம் (TN Government) கூறியுள்ளது.
கோயம்பேடு சந்தை வளாகத்தில் சில்லறை பழங்கள் மற்றும் காய்கறி கடைகளின் செயல்பாட்டிற்கு புதிய தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதேபோல், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மொத்த சந்தைகளில் உள்ள சில்லறை விற்பனை நிலையங்கள் மூடப்பட்டிருக்கும்.
பெரிய வடிவமைப்பு கடைகள் (3000 சதுர அடி மற்றும் அதற்கு மேற்பட்ட அளவு கொண்ட ஷோரூம்கள்), ஷாப்பிங் வளாகங்கள் மற்றும் மால்கள் செயல்பட அனுமதிக்கப்படாது.
எஸ்.எஸ்.சி, யு.பி.எஸ்.சி, ஆர்.ஆர்.பி மற்றும் டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளுக்கு செல்பவர்கள் முறையான அட்மிட் கார்டுகளை காண்பித்தால் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
முன்னதாக, புதிய கட்டுப்பாடுகள் குறித்து ஏப்ரல் 24 அன்று தமிழக அரசு ஒரு அறிக்கையை வெளியிட்டது. பல வித புதிய கட்டுப்பாடுகள் அதில் விதிக்கப்பட்டன.
புதிய கட்டுப்பாடுகளின் கீழ், திரையரங்குகள், கேளிக்கை கூடங்கள், மால்கள், பார்கள் இயங்க அனுமதி இல்லை. அழகு நிலையங்கள், சலூன்கள் இயங்க அனுமதி இல்லை. பெரிய கடைகள், ஷாப்பிங் மால்களுக்கு அனுமதி இல்லை. உணவகங்களில் உணவை எடுத்துச்செல்லவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வழிபாட்டுத் தலங்களில் மக்கள் வழிபாட்டுக்கு அனுமதி இல்லை. வணிக வளாகங்களில் இயங்கும் மளிகை, காய்கறி கடைகளுக்கு அனுமதி இல்லை. தனியாக இயங்கும் மளிகை காய்கறி கடைகளுக்கு ஏசி இல்லாமல் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவற்றைப் போல இன்னும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் இன்னும் அமலில் உள்ள நிலையில், இந்த அனைத்து கட்டுப்பாடுகளும் அடுத்த அறிவிப்பு வரும் வரை நீட்டிக்கப்படுவதாக இன்று தமிழக அரசு தெவித்துள்ளது.
ALSO READ: தமிழகத்தில் மேலும் 15,830 பேருக்கு கொரோனா பாதிப்பு
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR