வேட்பாளர்கள் வாக்கெண்ணிக்கை மையங்களில் நுழைய RT-PCR சோதனை சான்றிதழ் அவசியம்: EC

மே2, அதாவது ஞாயிற்றுக்கிழமை வாக்கெண்ணிக்கை மையங்களுக்குள் வரும் வேட்பாளர்கள், கட்சி வாக்குப்பதிவு முகவர்கள், அதிகாரிகள் என அனைவரும் ஆர்டி-பிசிஆர் சோதனை செய்துகொண்டு, தொற்று இல்லை என உறுதி செய்யும் சான்றிதழை வைத்திருப்பது அவசியம் என்று மாநில தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 28, 2021, 03:34 PM IST
  • மே 2 ஆம் தேதி வாக்கெண்ணிக்கைக்கு தமிழகம் தயாராகி வருகிறது.
  • வாக்கெண்ணிக்கை மையங்களுக்கு வருபர்களுக்கான ஒரு முக்கிய அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
  • வாக்கெண்ணிக்கை மையங்களுக்குள் வரும் அனைவரும் கோவிட் நெகடிவ் சான்றிதழை வைத்திருப்பது அவசியம்.
வேட்பாளர்கள் வாக்கெண்ணிக்கை மையங்களில் நுழைய RT-PCR சோதனை சான்றிதழ் அவசியம்: EC title=

சென்னை: கொரோனா தொற்றின் அளவு அதிகரித்துள்ள நிலையில், மே 2 ஆம் தேதி வாக்கெண்ணிக்கைக்கு தமிழகம் தயாராகி வருகிறது. இந்த நிலையில், வாக்கெண்ணிக்கை மையங்களுக்கு வருபர்களுக்கான ஒரு முக்கிய அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. 

மே2, அதாவது ஞாயிற்றுக்கிழமை வாக்கெண்ணிக்கை மையங்களுக்குள் வரும் வேட்பாளர்கள், கட்சி வாக்குப்பதிவு முகவர்கள், அதிகாரிகள் என அனைவரும் ஆர்டி-பிசிஆர் சோதனை செய்துகொண்டு, தொற்று இல்லை என உறுதி செய்யும் சான்றிதழை வைத்திருப்பது அவசியம் என்று மாநில தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார். 

COVID-19 தொற்றுநோயின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், தேர்தல் பரப்புரைகளின் போது அரசியல் கட்சிகளை பேரணிகளை நடத்த அனுமதித்ததற்காக தேர்தல் ஆணையத்தை மெட்ராஸ் உயர் நீதிமன்றம் கடுமையாக சாடியது. இதற்குப் பிறகு, மே 2 அன்று COVID பாதுகாப்பு நெறிமுறைகள் பின்பற்றப்படாவிட்டால் வாக்கெண்ணிக்கை நிறுத்தப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டது. 

இதைத் தொடர்ந்து, தமிழக தலைமை தேர்தல் நிர்வாகி சத்யபிரதா சாஹூ, மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.  வாக்கெண்ணிக்கை மையங்களுக்கு வரும் அரசியல் வேட்பாளர்கள், தடுப்பூசிகளின் இரண்டு டோஸ்களையும் போட்டிருந்தாலோ, அல்லது ஆர்டி-பி.சி.ஆர் சோதனை செய்துகொண்டு, தொற்று இல்லை என்ற சான்றிதழ் வைத்திருந்தால் மட்டுமே வாக்கு எண்ணும் மையத்தில் அனுமதிக்கப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். 

தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை போட்டுக்கொண்டவர்களுக்கு ஆர்டி-பி.சி.ஆர் சோதனை சான்றிதழ் தேவையில்லை என உள்ளூர் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மேலும், வாக்கெண்ணும் மையங்களுக்கு வேட்பாளர்கள் மற்றும் வாக்குப்பதிவு முகவர்கள் நுழைவதை சரிபார்க்க அடுத்த மூன்று நாட்களில் மாவட்ட தேர்தல் அதிகாரிகளால் முகாம்கள் ஏற்பாடு செய்யப்படலாம் என்று வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வாக்கெண்ணிக்கை நடக்கும் நாளில் எந்த குழப்பமும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு தமிழக நிர்வாக அதிகாரி, தேர்தல் ஆணைய (Election Commission) அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன. செவ்வாயன்று தேர்தல் ஆணையம் மே 2 அல்லது அதற்குப் பிறகு எந்த வெற்றி ஊர்வலங்களும் நடைபெறாது என்று உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: தமிழகத்தில் மே 1, 2ம் தேதிகளில் முழு ஊரடங்கு: ஐகோர்ட் பரிந்துரை

தேர்தல் ஆணையத்தை சாடிய மெட்ராஸ் உயர்நீதிமன்றம் 

கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையிலும்,  அரசியல் கட்சிகள் பேரணிகளை நடத்துவதைத் தடுக்காததற்காக இந்திய தேர்தல் ஆணையத்தை (ECI) மெட்ராஸ் உயர்நீதிமன்றம் (Madras High Court) கடுமையாக சாடியது. மேலும் தொற்றுநோயின் இரண்டாவது அலைக்கு தேர்தல் ஆணையமே காரணம் என்றும் உயர்நீதிமன்றம் குற்றம் சாட்டியது. 

தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, பொது சுகாதாரம் மிக முக்கியமானது என்பதை அரசியலமைப்பு அதிகாரிகளுக்கே நினைவூட்ட வேண்டியுள்ளது மிகவும் வருத்தமளிப்பதாகக் குறிப்பிட்டார். மேலும் கோவிட் நெறிமுறைகள் பின்பற்றப்படாவிட்டால் மே 2 ம் தேதி வாக்கெண்ணிக்கை நிறுத்தப்படும் என்றும் எச்சரித்தார். கோவிட் நெறிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்யும் திட்டத்தை உருவாக்குவதற்காக மாநில சுகாதார செயலாளருடன் சந்திப்புகளை நடத்துமாறு தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக தலைமை நிர்வாக அதிகாரிக்கு மெட்ராஸ் உயர்நீதிமன்றம் மேலும் அறிவுறுத்தியது. 

இதற்காக திட்டமிடப்பட்டுள்ள நடவடிக்கைகளின் வரைவை ஏப்ரல் 30 ம் தேதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு இந்திய தேர்தல் ஆணையத்திடம் உயர்நீதிமன்றம் கேட்டுக்கொண்டது. தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் அரசியல் பேரணிகளை அனுமதித்ததற்காக தேர்தல் ஆணைய அதிகாரிகள் 'கொலைக் குற்றச்சாட்டுகளில் பதிவு செய்யப்பட வேண்டும்' என்று தான் கருதுவதாகவும் தெரிவித்தார்.

ALSO READ: தேர்தல் ஆணையம் மீது கொலைக் குற்றம் சுமத்தினால் கூட தவறில்லை: நீதிமன்றம்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News