இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவி வருகிறது. பல மாநிலங்களில் ஒற்றை நாள் தொற்றின் அளவு புதிய உச்சங்களைத் தொட்டு வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் என்ணிக்கை உயர்ந்து வருகிறது. புதிதாக பதவியேற்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு தொற்று பரவலைத் தடுக்க பலவித நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 


இந்த நிலையில், இன்று, மே மாதம் 14ம் தேதி (வெள்ளிக்கிழமை) தமிழகத்தில் (Tamil Nadu) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31,892 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 15,31,377 ஆக உயர்ந்துள்ளது. 


இன்று சென்னையில் மட்டும் 6,538 பேர் புதிதாக தொற்றுக்கு ஆளானார்கள். இதனுடன் சென்னையில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,25,799ஆக உயர்ந்துள்ளது. 


இன்று தமிழகத்தில் 288 பேர் தொற்று பாதிப்பால் இறந்தனர். தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 16,768 17,056 ஆக உயர்ந்துள்ளது. 


இன்று தமிழகத்தில் மொத்தம் 20,037 நோயாளிகள் தொற்றிலிருந்து குணமாகியுள்ளனர். 



 


தமிழகம் முழுவதும்  தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 13,18,982 என்ற அளவில் அதிகரித்துள்ளது.


மேலும் வீட்டில் தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 1,95,339. மொத்தம் பரிசோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 2,43,08,132. இன்று ஒரு நாளில்  மட்டும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை எண்ணிக்கை 1,53,363.


ALSO READ | கண்ணுக்கு தெரியாத எதிரியுடனான போரில் நிச்சயம் வெல்வோம்: பிரதமர் மோட


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR