வெயில் காலம் என்றாலே மின்சார பற்றாக்குறை ஏற்பட்டு மின்வெட்டு பிரச்சனை அதிகமாகிறது. இந்த காலகட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் தேர்வுகளும் இருப்பதால், மின்வெட்டால் மாணவர்கள் மிக அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தேர்வு நேரத்தில் தடையற்ற மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மின்சார வாரியம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.


தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை மறுநாள் (வியாழக்கிழமை) தொடங்கி, வருகிற 28 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 


மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வுகள் (பிளஸ்-1) வருகிற 10 ஆம் தேதி தொடங்கி 31 ஆம் தேதி வரையிலும், 10 ஆம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி.) பொதுத் தேர்வுகள் வருகிற 6 ஆம் தேதி தொடங்கி 30 ஆம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளன.


இந்த நிலையில், பொதுத்தேர்வு தொடர்பாக அனைத்து மண்டல தலைமைப் பொறியாளர்களுக்கு மின்சார வாரியம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.


மேலும் படிக்க | மக்களே உஷார்: நாளை ஆரம்பம் ஆகிறது அக்னி நட்சத்திரம், வெயிலை சமாளிக்க சில டிப்ஸ் இதோ



இந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:


- 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெறும் பொதுத்தேர்வின் போது தேர்வு மையங்களில் மின் தடை ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


- பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகத்தை நிறுத்த ஏற்கனவே திட்டமிட்டிருந்தாலும் கூட பொதுத்தேர்வின் போது மின் தடை ஏற்படக்கூடாது.


- பொதுத்தேர்வு மையங்களுக்கு அருகில் இருக்கும் மின்மாற்றிகளை ஆய்வு செய்ய வேண்டும். 


- ஏதேனும் பழுதடைந்திருந்தால் உடனடியாக மாற்றம் செய்ய வேண்டும்.


தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மின்வெட்டால் எந்த வித பிரச்சனையும் ஏற்படாத வகையில் அனைத்து வித நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது.


மேலும் படிக்க | 10, 11, 12 மாணவர்களுக்கு மே 5ஆம் தேதி பொதுத் தேர்வு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR