தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ள நிலையில், பல கருத்து கணிப்புகள் திமுக கட்சி வெற்றி வெற்றி பெறும் என கூறியுள்ள நிலையில், கருத்து கணிப்பில் திமுக ஜெயிப்பதும், களத்தில் அதிமுக ஜெயிப்பதும் சகஜம் என்ற வகையில் இன்னும் நம்பிக்கையுடன் இருக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதிமுக தொண்டர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில், OPS, EPS கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.


தமிழக முதல்வர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வர் திரு. ஓ.பன்னீர்செல்வம் இணைந்து "நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும், இரட்டை இலையே என்றென்றும் வெல்லும்" என அறிக்கை வெளியிட்டுள்ளனர். 



கடந்த 2016 சட்டமன்றப்‌ பொதுத்‌ தேர்தல்‌ முடிவுகள்‌ வெளியிடப்படுவதற்கு முன்‌ வந்த அனைத்து கருத்துக்‌ கணிப்புகளும்‌, அதிமுக வெற்றி பெறும் என கூறவேயில்லை. திமுக தான் ஆட்சியை பிடிக்கும் எனக் கூறியது. ஆனால், முடிவுகள் வேறு மாதிரியாக இருந்து, அதிமுக ஆட்சியை பிடித்தது.  


அப்போது, அப்போதைய முதல்வர் செல்வி ஜெயலலிதா பேசிய வீடியோவையும் அதிமுக தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. 



இப்போது வெளியிடப்பட்டுள்ள கணிப்பு முடிவுகள்‌ கழக உடன்பிறப்புகளை சோர்வடையச்‌  செய்யும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ளது என்றும், வாக்கு எண்ணிக்கையின்‌ போது நமது செயல்பாடுகளை முடக்குவத ற்கான முயற்சிகள் இவை என இரு தலைவர்களும் தெரிவித்துள்ளனர். 


ALSO READ | No Victory Rally: தமிழகத்தில் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து ஊர்வலம் பட்டாசுக்கு சென்னை SC தடை


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR