சென்னை: தமிழகத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்க இன்னும் சில மணி நேரங்களே இருக்கும் நிலையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துக் கொண்டு இருக்கும் நிலையில், வாக்கு எண்ணிக்கை மற்றும் அன்றைய நடவடிக்கைகள் பற்றி சென்னை உயர் நீதிமன்றம் சில அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.
“வாக்கு எண்ணிக்கை மற்றும் வெற்றியின் போது தொண்டர்களை தலைவர்கள் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். மே 2ம் தேதி பட்டாசுகள் வெடிக்க கூடாது, வெற்றிக் கொண்டாட்டங்கள், ஊர்வலம் கூடாது. இதுதொடர்பாக, அரசியல் கட்சிகள் சிறந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
Also Read | வாக்கு எண்ணிக்கை நாளில் முழு ஊரடங்கு: வேட்பாளர்கள், முகவர்களுக்கு கட்டுப்பாடு இல்லை
அரசியல் தலைவர்கள் முன்னுதாரனமாக இருக்க வேண்டும். தேர்தல் ஆணையத்திற்கு அரசியல் கட்சிகள் முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும். வாக்கு எண்ணிக்கைக்கு தேர்தல் ஆணையம் செய்துள்ள நடவடிக்கைகள் சென்னை நீதிமன்றத்திற்கு திருப்தியளிக்கிறது.
மத்திய அரசிடம் இருந்து இரண்டரை லட்சம் தடுப்பூசிகளை கேட்டோம். ஆனால் தற்போது வரை அதில் 25 சதவீத மருந்துகள் மட்டுமே கிடைத்துள்ளதாக நீதிமன்றத்தில் தமிழக அரசு கூறிய நிலையில், எஞ்சிய தடுப்பூசி மற்றும் மருந்துகள் எப்போது மாநில அரசுக்கு கிடைக்கும் என்ற விவரங்களை மே 5 ஆம் தேதியன்று தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தல் வெளியிட்டுள்ளது.
Also Read | தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜன் உற்பத்தியை கண்காணிக்க குழு
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR