அரசு பள்ளிகளுக்கு மாணவர்களை அதிக அளவில் ஈர்க்கும் வகையில், முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டன. இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் உள்ள 2381 அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த கடந்த 2018 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் எல்கேஜி, யுகேஜி (LKG, UKG) வகுப்புகள் அறிமுகப்படுத்தபட்டன.


இந்நிலையில், வரும் கல்வியாண்டு முதல் தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் நடைபெறாது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும், பள்ளிகளுக்கு பதிலாக அங்கன்வாடி மையங்களிலேயே மழலையர் வகுப்புகள் முறைப்படுத்தப்பட்டு மேம்படுத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது.


மேலும் படிக்க | சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபடலாம் - தமிழக அரசு அனுமதி


மேலும், இந்த வகுப்புகளுக்காக பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களும் அவர்கள் ஏற்கனவே பணியாற்றிய ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் எனவும் கூறப்பட்டுள்ளது.



பள்ளிக்கல்வித்துறையின் இந்த நடவடிக்கை காரணமாக, அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வெகுவாக குறையும் சூழல் உருவாகியிருக்கிறது. தற்போது எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் மூடப்படுவதன் காரணமாக அரசுப் பள்ளிகளில் சேர்க்கலாம் என எண்ணியிருந்த பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் அதிக கட்டணங்களைச் செலுத்தி சேர்க்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 


மேலும் படிக்க | நடிகர் விஜயின் படத்தை பார்க்காதீர்கள்: மதுரை ஆதினம்


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR