TN Ration Card Holders: முகத்தை காட்டினால் ரேஷன் பொருள்; தமிழக அரசின் சூப்பர் திட்டம்
Ration Card Holders: கருவிழி ஸ்கேன் மூலம் ரேஷன் பொருள் கொடுக்கும் திட்டம் விரைவில் நடைமுறைக்கு வர இருப்பதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். முதல் கட்டமாக சில மாவட்டங்களில் தொடங்கப்படும் இந்த திட்டம் விரைவில் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட இருப்பதாக அறிவித்துள்ளார்
New Scheme For Ration Card Holders: இலவச ரேஷன் பொருள் வழங்குவதில் இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக தமிழகம் இருந்து வருகிறது. இலவச அரிசி முதல் பொங்கல் பொருட்கள் வழங்குவது வரை சிறப்பாக செயல்படுத்தி வரும் தமிழக அரசு, போலி ரேஷன் அட்டைதாரர்களை அடையாளம் காணவும், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோரும் ரேஷன் பொருட்களை வாங்கவும் புதிய திட்டத்தை விரைவில் செயல்படுத்த இருக்கிறது.
மேலும் படிக்க | ரேஷன் அட்டைதாரர்களுக்கு வேளாண் பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்பு
அதாவது, கண்களை காட்டினால்போதும் இனி ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ள முடியும். கருவிழிகளை ஸ்கேன் செய்து அதன் மூலம் பயனாளர்களை அடையாளம் கண்டு பொருட்களை வழங்கலாம். இது குறித்து ஏற்கனவே அறிவிப்பு வெளியாகி இருந்தாலும், திட்டம் நடைமுறைப்படுத்துவது குறித்து அமைச்சர் சக்கரபாணி புதிய அப்டேட்டை தமிழக சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த அவர்,"கைரேகை வைத்து பொருள் பெற இயலாத மாற்றுத்திறனாளிகள், வயலில் வேலை செய்வோர் பாதிக்கப்படுகிறார்கள். அதனால் கண் கருவிழி மூலம் உணவுப் பொருட்கள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்கனவே மாதிரி திட்டமாக அறிமுகப்படுத்தியுள்ளார்.
விரைவில் அந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்காக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும்" என தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, கைரேகை அழிந்தவர்களுக்கு நியாய விலை கடைகளிலேயே விண்ணப்பங்களை பெறக்கூடிய வசதியை ஏற்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்றுக் கொண்ட அமைச்சர் சக்கரபாணி, வருவாய்துறை அலுவலகங்களுக்கு செல்லும் நிலை மாற்றப்பட்டு நியாய விலை கடைகளிலேயே இந்த விண்ணப்பங்களை கொடுக்கும் முறை அமல்படுத்தப்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றார்.
மேலும் படிக்க | ரேஷன் கார்டுதாரர்களுக்கு லாட்டரி, இலவச ரேஷன்..என்னென்ன கிடைக்கும்?
மேலும் படிக்க | Free ration: இலவச ரேஷன் திட்டம், மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ