Breakfast Scheme in Tamil Nadu: குழந்தைகளின் படிப்பை ஊக்குவிக்கும்விதமாகவும், இடைநிற்றலை தடுக்கும் வகையிலும் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதுதான் மதிய உணவுத் திட்டம். தமிழக முதல்வராக இருந்த காமராஜர், மாநிலத்தின் அனைத்து தொடக்கப்  பள்ளிகளிலும் மதிய உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்தினார். அதன் பின்னர் இந்த திட்டத்தை நிறுத்தாமல் முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ராமச்சந்திரனும் தொடர்ந்து செயல்படுத்தி வந்தார். பின்னர் இது அனைத்து பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. இதனையடுத்து கலைஞர் ஆட்சியின்போது மதிய உணவு திட்டம் என்பது சத்துணவு திட்டம் என்று மாற்றப்பட்டு, 15 நாட்களுக்கு ஒருமுறை முட்டை வழங்கப்பட்டு வந்தது. அதன் பின்னர் ஜெயலலிதா ஆட்சியிலும் இந்த சத்துணவு திட்டம் தொடர்ந்து செயல்பட்டு வந்தது, 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டும் மாணவர்களுக்கு முட்டை வழங்கப்பட்டு வந்தது. இது படிப்படியாக மாறி தினமும் உணவுடன் சேர்த்து முட்டை வழங்கப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


இந்த செயல்முறை இன்னும் தொடர்ந்து நடந்து கொண்டேதான் இருக்கிறது, முட்டையுடன் சேர்த்து வாரத்துக்கு மூன்று நாட்கள் ஏதேனும் பயிர் வகைகள் வழங்கப்பட்டன.  அதன் பின்னர் குழந்தைகளுக்கு கலவை சாதம் வழங்கப்பட்டது, இப்படி சத்துணவு திட்டத்தில் ஒவ்வொரு அரசும் பல மேம்பாடுகளை செய்து வருகிறது. வறுமையில் இருக்கும் ஏழைக் குழந்தைகள் பலருக்கும் இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இதுவரையில் மதியம் மட்டுமே பள்ளிகளில் உணவு வழங்கப்பட்டு வந்த நிலையில் இப்போதைய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்கப் பள்ளி மாணவர்களின் பசியை போக்கும் வகையில் காலை உணவு திட்டத்தை செயல்படுத்தியுள்ளார். கடந்த செப்டம்பர் 15ம் தேதி  பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. காலை நேரத்தில் சாப்பிடமுடியாமல் ஏழ்மை நிலையில் தவிக்கும் மாணவர்களுக்கு இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. காலையில் ஆரோக்கியமான உணவை சாப்பிட்டால் மாணவர்களால் படிப்பில் கவனம் செலுத்த முடியும், இதனை கருத்திற்கொண்டு அரசு தற்போது செயல்படுத்தியிருக்கும் இந்த காலை உணவு திட்டத்தின் மூலம் மாணவர்களின் படிப்பு திறன் மேம்படுவதோடு அவர்களின் வயிறு நிறைந்து உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தும் கிடைக்கிறது.


மேலும் படிக்க | ஆசிரியர் காலிப் பணியிடங்கள் எப்போது நிரப்பப்படும்? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்


மாணவர்களுக்கு வழங்கப்படடு வரும் காலை உணவு திட்டம் பற்றி சமூக செயற்பாட்டாளர் வி.கே.தனபாலன் கூறியதாவது: பள்ளிகளில் காலை அல்லது மதிய உணவுகள் இல்லாத நேரங்களில் மிகவும் சிரமப்பட்டது, அன்றாடம் கூலி வேலைக்கு செல்லும் மக்கள்தான். காலை முதலே காட்டு வேலை, விவசாய வேலை, கட்டட வேலை என புறப்பட்டு சென்று விடுவார்கள். இதனால் பெரும்பாலும் அவர்களது வீடுகளில் காலை உணவு சமைக்கப்படுவதில்லை. நான் பல கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் பாடம் எடுக்க சென்றுள்ளேன். அங்கே காலை சாப்பிடாமல் யார் வந்து உள்ளீர்கள் என்று கேட்டால் 80 சதவீதத்திற்கும் மேல் கையை உயர்த்துவார்கள். காரணம் என்னவென்றால் அவர்களது வீட்டில் உணவு இருக்காது, அந்த குழந்தைகள் அதே பழக்கத்தில் வளர்கின்றனர். பள்ளிகளில் மதியம் கொடுக்கப்படும் மதிய உணவு திட்ட சாப்பாடுதான் பாதி பேருக்கு காலை உணவாக இருக்கின்றது. 



இதனால் மாணவர்களின் ஆரோக்கியம் கெட்டுப் போகிறது. ஒரு நாட்டில் சிறுவர் சிறுமிகளின் ஆரோக்கியம் கெட்டுப் போகிறது என்றால் வருங்கால இளைஞர்களின் ஆரோக்கியம் கெட்டுப் போகிறது என்று அர்த்தம். சரியான நேரங்களில் சரியான உணவை எடுத்துக் கொள்ளவில்லை என்றால் உடலில் வைட்டமின் குறைபாடு ஏற்பட்டு வருங்கால சந்ததியே கேள்விக்குறிக்கு உள்ளாகும். ஒரு நாட்டின் செல்வம் என்பது மனிதர்கள்தான். மண்ணையும் மனிதர்களையும் பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமை.  மண்ணை பத்திரமாக பாதுகாக்க அதற்குரிய நேரத்தில் தண்ணீர் விட்டு போதுமான மருந்து கொடுத்தால்தான் மரங்கள் வளமாக வளரும். அதே அக்கறையை மனிதர்கள் மீதும் ஒரு அரசு காட்ட வேண்டும், அப்படி இருந்தால்தான் ஒரு நாடு வளர்ச்சி பெறும். அதனால் காலை உணவு திட்டம் என்பது மிகவும் உயர்வான ஒரு திட்டம். ஒரு தாய் தன் பிள்ளையை எப்படி கவனமாக பார்த்துக் கொள்வாரோ, அதைப்போல ஒரு அரசாங்கம் தனது மக்களை பார்த்து கொள்ளும். அப்படித்தான் இதை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். 


 காமராஜரின் சத்துணவு திட்டம் வரவில்லை என்றால் இன்று பாதிபேர் பள்ளிக்கு வந்திருக்க மாட்டார்கள். அது ஒரு புரட்சிகரமான வளர்ச்சி. அந்த சத்துணவு திட்டத்தில் சாப்பிட்டு இன்று பல ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளனர். தற்போது கொடுக்கப்படும் காலை உணவு திட்டம் பள்ளி மாணவர்களின் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். பசி வந்தால் குற்ற உணர்வுகள் மட்டுமே வரும், நல்ல உணர்வுகள் வராது. குழந்தைகளை நல்ல ஆரோக்கியத்துடனும் நல்ல மனநிலையுடன் வளர இந்த காலை உணவு திட்டம் நிச்சயம் உதவும். இதனை சரியான முறையில் மாணவர்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டியது அரசு மற்றும் அரசு அதிகாரிகளின் கடமை" என்றார்.


மேலும் படிக்க | மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்கள்: செந்தில் பாலாஜி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ