தமிழகம் முழுவதும் 64 துறைகளை சேர்ந்த 4 லட்சம் அரசு ஊழியர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது குறித்து அரசு ஊழியர் சங்க பொது செயலாளர் அன்பரசன் கூறியதாவது:-


தமிழக அரசு ஊழியர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர் அரசு கவனத்தை ஈர்க்க ஜனவரி மாதம் முதல் பல்வேறு அறிக்கைகளை கொடுத்தோம். மத்திய அரசுக்கு இணையான ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.


பல்வேறு அமைப்புகளும் இந்த வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து உள்ளன. வேலை நிறுத்தததால் அரசு சேவைகள் நிச்சயம் பாதிக்கும். அரசு எங்களது கோரிக்கைகள் குறித்து இதுவரை செவி சாய்க்கவில்லை. 4 லட்சம் அரசு ஊழியர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொள்வார்கள். 64 துறைகளை சேர்ந்த தமிழக அரசு ஊழியர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.