தமிழகத்தில், கடந்த தேர்தலில் திமுக   வெற்றி பெற்று ஆட்சி அமைத்தவுடனே, முதல்வர் மு.க.ஸ்டாலின்,  பதவி ஏற்ற உடனே  5 முக்கிய திட்டங்களில் கையெழுத்திட்டார். அந்த 5 திட்டங்களில் ஒன்று, சாதாரண கட்டணம் வசூலிக்கப்படும் நகரப் பேருந்துகளில், அனைத்து மகளிரும்  இலவசமாக பயணம் செய்யலாம் என்ற திட்டம் ஆகும். இந்நிலையில், தற்போது திருநங்கைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளும், நகரப்புற அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 TN COVID-19 Update: 18,000-க்கு கீழ் இறங்கியது ஒரு நாள் தொற்றின் அளவு, 405 பேர் உயிர் இழப்பு

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், மகளிரின் நலன் கருதி தமிழக அரசு பொறுப்பேற்ற அன்றே முதலமைச்சர் மு,க்.அஸ்டாலின்மகளிருக்கு அரசு நகரப் பேருந்துகளில் இலவச பயணச் சலுகையை அறிவித்து உத்தரவிட்டுள்ளார். அதன் தொடர்ச்சியாக, மாற்றுத் திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கும் நகரப்புற அரசு பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ளலாம் முதல்வர் அவர்கள் ஆணையிட்டுள்ளார். தற்போதுள்ள ஊரடங்கு  விலக்கிக் கொள்ளப்பட்ட உடன் இந்த உத்தரவு நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதே போன்ற ஒரு முக்கிய நடவடிக்கையாக ‘ஆவின்’ பால் விலை குறைக்கப்படும்  என்ற அறிவிப்பு வெளியாகியது. கடந்த மாதம் 8 ஆம் தேதி ஆவின் பால் விலை குறைக்கப்படுவது தொடர்பான முழு விவரத்தையும் தமிழக அரசு வெளியிட்டது. இந்த திட்டம் 16 ஆம் தேதி  அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது


ALSO READ: TN School Update: தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் பள்ளிக்கு வர உத்தரவு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR