TN School Update: தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் பள்ளிக்கு வர உத்தரவு

வரும் 14 ஆம் தேதி முதல் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 9, 2021, 06:48 AM IST
  • ஊரடங்கு காரணமாக கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளது
  • பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள்
  • இந்த ஆண்டு பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படமாட்டாது
TN School Update: தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் பள்ளிக்கு வர உத்தரவு title=

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மெல்ல மெல்ல குறைந்துகொண்டு வருகிறது. மிக அதிகமாக இருந்த ஒரு நாள் தொற்றின் அளவு தற்போது படிப்படியாக வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா இரண்டாம் அலை பரவலலை குறைக்க முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

இந்த முழு ஊரடங்கு (Full Lockdown) காரணமாக கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் (Online Class) மூலம் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் அனைத்து ஆசிரியர்களும் வீட்டிலிருந்தபடியே பணியாற்றி வருகின்றனர்.

ALSO READ | கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்ய திருவாரூர் செல்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்., நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக மாணவர் நலன் கருதி இந்த ஆண்டு பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படமாட்டாது என தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்குவது, உயர்கல்வி பயிலுவதற்கான சான்றிதழ்கள் வழங்குவது சார்ந்த பணிகள் நடைபெற உள்ளதாலும் மாணவர்கள் சேர்க்கை ஆரம்பிக்கப்பட உள்ளதாலும் மற்றும் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய விலையில்லா பாட புத்தகங்கள் மற்றும் கற்றல் கற்பித்தலுக்கு தேவையான இதர நலத்திட்டங்கள் வழங்க வேண்டி உள்ளதாலும், பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளை சுத்தம் செய்வது சார்ந்தும் மற்றும் மாணவர்கள் கல்வி தொலைக்காட்சி கற்றல் சார்ந்த நிகழ்ச்சிகளை பார்வையிட செய்வது சார்ந்தும் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் அனைவரும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை (SOP) பின்பற்றி 14.06.2021 முதல் பணிக்கு வருகை புரிய வேண்டுமென இதன் மூலம் அறிவுறுத்தப்டுகிறது. இதனை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் உறுதி செய்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது என இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

ALSO READ | FrontLine Workers: முன்களப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை, தமிழக அரசு அறிவிப்பு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News