சென்னை: அரசு பள்ளிகளில் படித்த ஏழை மாணவர்களுக்கு தனியார் மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைத்தும் கல்வி கட்டணம் செலுத்த முடியாமல் பலர் வெளியேறும் நிலை ஏற்பட்டது. இதனால் ஏழை மாணவர்களின் கல்வி கட்டணத்தை தமிழக அரசு (TN Govt) ஏற்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதனையடுத்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் (MK Stalin), "மாணவர்களின் கல்விக்கட்டணத்தை திமுக (DMK) ஏற்கும்" என அறிவித்தார். எதிர்கட்சி தலைவரின் அறிக்கையை அடுத்து, உடனடியாக அதிமுக (AIADMK) அரசு  தரப்பில் இருந்து அரசு பள்ளிகளில் படித்த மருத்துவ மாணவர்களின் கல்விக்கட்டணத்தை செலுத்தும் என அறிவித்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

16 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு:


மாணவர்களின் கல்விக்கட்டணம் தொடர்பாக, இன்று தமிழக அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டது. அதில் "7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் மூலம் மருத்துவ படிப்பான MBBS, BDS சேர்ந்த  மாணவர்களுக்கு கட்டணத்தை செலுத்த 16 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த கட்டணத்தை தமிழ்நாடு மருத்துவ சேவை கழகமே (Tamilnadu Medical Services Corporation) செலுத்தும் எனவும், இந்த தொகை அனைத்தும் தமிழ்நாடு (Tamil Nadu) மருத்துவ சேவை கழகத்தில் சுழல் நிதியாக இருப்பு வைக்கப்படும் எனவும் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


ALSO READ | ஏழை மாணவர்களின் மருத்துவ படிப்பில் அசத்தும் திமுக vs அதிமுக


நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்:


நீட் தேர்வு (NEET Exam) காரணமாக ஒவ்வொரு வருடமும் மருத்துவ கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துக் கொண்டே வந்தது. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை பல தரப்பில் இருந்து வைக்கப்பட்டது. ஆனால் மத்திய அரசு நீட் தேர்வு ரத்து என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளது. மேலும் மருத்துவ கல்லூரிகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு போதுமான இடங்கள் கிடைப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன.


தமிழக அரசுக்கு பாராட்டு:


இதனையடுத்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி அதிமுக அரசு (AIADMK) அரசாணையை வெளியிட்டது. அதுமட்டுமில்லாமல் இந்த ஆண்டு முதலே ஆணையை அமல்படுத்தியது. இதனால் பல ஏழை மாணவர்களின் டாக்டர் கனவு நிறைவேறியது. தமிழக அரசின் இந்த நடவடிக்கையை அனைத்து தரப்பினரும் பாராட்டினார்கள். 


ALSO READ | அனைத்து ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளையும் தடை செய்ய தமிழக அரசு முடிவு






தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR