பொங்கல் பரிசாக ரூ.1000 தருவதற்காக ரூ.2,363 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியீட்டுள்ளது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, கரும்பு, முந்திரி மற்றும் 1000 ரூபாய் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று முதலமைச்சர் நேற்று அறிவித்திருந்தார்.


இந்த பரிசு தொகுப்பு அரிசி விருப்ப குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே. சர்க்கரை மற்றும் இதர கார்டுதாரர்களுக்கு பரிசுத்தொகுப்பு கிடைக்காது. இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான தமழிக அரசாணையை இன்று பிறப்பித்துள்ளது.


இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்; பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முந்திரி, திராட்சை, கரும்பு ஆகியவை அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்றும், அதனுடன் அரிசி ரேசன் அட்டை வைத்திருப்போருக்கு இந்த ஆண்டும் ரூ.1000 பரிசாக வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி நேற்று நடைபெற்ற புதிய மாவட்ட தொடக்க விழா நிகழ்ச்சியில் அறிவித்தார். இந்நிலையில், பொங்கல் பரிசு மற்றும் ரூ.1000 வழங்குவதற்காக ரூ. 2,363 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.