கிராம உள்ளாட்சி தேர்தல் வாக்குச்சீட்டு முறையில் நடத்தப்படும்: மாநிலத் தேர்தல் ஆணையர்
கிராம உள்ளாட்சி தேர்தல் வழக்கம்போல் வாக்குச்சீட்டு முறையில் நடைபெரும் என மாநிலத் தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்!!
கிராம உள்ளாட்சி தேர்தல் வழக்கம்போல் வாக்குச்சீட்டு முறையில் நடைபெரும் என மாநிலத் தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்!!
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் உள்ளது. இந்த விவகரத்தில் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் மாறி மாறி குற்றம்சாட்டி வந்தனர். இதுதொடர்பான உச்சநீதிமன்ற வழக்கில், வரும் `டிசம்பர் 2 ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும்' என மாநிலத் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தேர்தல் ஆணையர் பழனிசாமி, கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி அமைப்புகளுக்கு மட்டும் டிச.27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ளார். மேலும், வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும் என அறிவித்தார்.
இதையடுத்து செய்தியார்களை சந்தித்த ஆணையர் பழனிசாமி கூறுகையில்; ``தமிழகத்தில் டிசம்பர் மாதம் 27 மற்றும் 30 ஆகிய இரண்டு தினங்களில் இரு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும். வரும் 6 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கும். வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாள் டிசம்பர் மாதம் 13 ஆம் தேதி. இருகட்டங்களாக பதிவாகும் வாக்குகள் வரும் ஜனவரி மாதம் 2 ஆம் தேதி எண்ணப்படும்” என்று அறிவித்தார். ஆனால் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்காக தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளுக்கான வார்டு உறுப்பினர்கள் தேர்தல் தொடர்பான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்தார்.
மேலும், மறைமுக தேர்தல் ஜனவரி 11 ஆம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது. மாநில தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பில், ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டுமே தேர்தல் அறிவிக்கப்பட்டது. மற்றபடி நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளான மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டு கவுன்சிலருக்கான தேர்தல் அறிவிக்கப்படவில்லை. சில நிர்வாக காரணங்களுக்காக இந்தத் தேர்தல் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.