TN Lockdown: புதிய தளர்வுகள் அமலுக்கு வந்தன; எதற்கெல்லாம் அனுமதி
தமிழகத்தில் தளர்வுகளுடன கூடிய ஊரடங்கு ஜூலை 19 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் பீதியைக் கிளப்பி பலவித பாதிப்புகளை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை மெல்ல குறைந்து வருகிறது. தமிழகத்திலும் இரண்டாம் அலையின் தீவிரம் கட்டுக்குள் வந்துகொண்டிருக்கும் நிலையில், அடுத்தடுத்த கட்ட ஊரடங்குகளில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
ஏப்ரல், மே மாதங்களில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய கொரோனா தொற்று (Coronavirus) பாதிப்பு படிப்படியாக குறைந்துகொண்டு இருக்கின்றது. மே 21 ஆம் தேதி 36,000 என்ற எண்ணிக்கையை கடந்தது ஒரு நாள் தொற்று எண்ணிக்கை. கடுமையான தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள், ஊரடங்கு (Lockdown) ஆகியவற்றின் காரணமாக இந்த எண்ணிகை தற்போது வெகுவாக குறைந்துள்ளது. இறப்பு எண்ணிக்கையிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இது பெரிய அளவில் நிவாரணம் அளிக்கும் வகையில் உள்ளது.
ALSO READ: Ration Card முக்கிய செய்தி: ரேஷன் கடைகளில் புகார் பதிவேடு வைக்க தமிழக அரசு உத்தரவு
இந்நிலையில் தற்போது தமிழகத்தில் (Tamil Nadu) நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று காலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில், மாநிலத்தின் கொரோனா நோய்த்தொற்று நிலையை கண்காணித்து தொடர்ந்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு ஜூலை 19 ஆம் தேதி காலை 6 மணி வரை நீட்டிக்கப்படுகிறது.
எவை இயங்கும்
* திருமண நிகழ்வுகளில் 50 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
* இறுதிச்சடங்குகளில் 20 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
* நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர, அனைத்து பகுதிகளிலும், ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும்.
* கடைகள் மற்றும் செயல்பாடுகள் இன்று முதல் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
* புதுச்சேரிக்கான பஸ் சேவை தொடங்கப்படுகிறது.
* மத்திய மற்றும் மாநில அரசுகளின் வேலைவாய்ப்பு தொடர்பான எழுத்துத்தேர்வுகள் அரசு வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு நடத்த அனுமதி
* உணவகங்கள், டீக்கடைகள், அடுமனைகள் (பேக்கரி), நடைபாதை கடைகள், இனிப்பு, காரவகை பண்டங்கள் விற்பனை கடைகள் ஆகியவை 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இரவு 9 மணிவரை செயல்பட அனுமதி.
* பிற மாநிலங்களிலிருந்து தமிழகம் வர இ பதிவு (E Pass) முறை தொடரும் என அரசு தெரிவித்துள்ளது.
* மத்திய மாநில அரசு தேர்வுகளுக்கான தேர்வுகளை மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்று நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ALSO READ: தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாக இன்றைய கோவிட் பாதிப்பு நிலவரங்கள்
எவை இயங்காது
*திரையரங்குகளை திறப்பதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
* மதுக்கூடங்கள், சமுதாய, அரசியல் கூட்டக்கள், கலை, கலாச்ச்சார நிகழ்வுகளுக்கு தடை தொடர்கிறது.
*பள்ளிகள், கல்லூரிகள், கவ்லி நிறுவனங்கள், உயிரியல் பூங்காக்கள் ஆகியவற்றை திறக்க தடை தொடர்கிறது.
* மாநிலங்களுக்கு இடையிலான அரசு மற்றும் தனியார் பேருந்துகளுக்கு அனுமதி இல்லை.
கட்டாயம் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள்
*கொரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகளை பொதுமக்கள் அனைவரும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
* கொரோனா விதிமுறைகளை (Corona Guidelines) மீறுவோர்களுக்கு அபராதம் விதிக்கப்படும், அவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
* பொது இடங்களில் முகக்கவசங்கள், தனி மனித இடைவெளியை பின்பற்றுவது அவசியம்
*நோய் தொற்று அறிகுறி தென்பட்டவுடன் மருத்துவரை அணுக வேண்டும்.
ALSO READ: லியோனி பதவியேற்பு நிகழ்ச்சி திடீர் ரத்து; காரணம் என்ன..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR