TN Lockdown: அடுத்த கட்ட ஊரடங்கில் எதற்கெல்லாம் அனுமதி? இன்று முக்கிய அறிவிப்பு
21 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையில், அடுத்த கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? அப்படி நீட்டிக்கப்பட்டால், மேலும் என்னென்ன தளர்வுகள் அளிக்கப்படும் என்ற தகவலுக்கு அனைவரும் காத்திருக்கின்றனர்.
சென்னை: இந்தியாவில் கொரோனா தொற்றின் ஒரு நாள் பாதிப்பு அளவு படிப்படியாக குறைந்துகொண்டு இருக்கிறது. தமிழகத்திலும், மிக அதிகமாக இருந்த ஒரு நாள் தொற்றின் அளவு படிப்படியாக சரிந்து வருகிறது. ஊரடங்கால் சாதகமான சூழல் ஏற்பட்டு உள்ளது.
28 நாட்களாக தமிழகத்தில் (Tamil Nadu) தொடர்ந்து ஒரு நாள் தொற்றின் அளவில் நல்ல வீழ்ச்சியைக் காண முடிகிறது. 36,000-ஐத் தாண்டி சென்ற ஒரு நாள் தொற்றின் அளவு படிப்படியாக இறங்கி தற்போது 9,000-க்கும் கீழ் வந்துள்ளது. மற்ற மாநிலங்களைப் போலவே தமிழகத்திலும் ஊரடங்குக்கு பிறகு ஒரு நாள் தொற்றின் அளவு கணிசமாக குறைந்துள்ளது. தொற்று குறைந்து வரும் நிலையில், படிப்படியாக தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
தற்போது சில தளர்வுகளுடன் தமிழகத்தில் ஊரடங்கு (Lockdown) அமலில் உள்ளது. 21 ஆம் தேதியுடன் இந்த ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையில், அடுத்த கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? அப்படி நீட்டிக்கப்பட்டால், மேலும் என்னென்ன தளர்வுகள் அளிக்கப்படும் என்ற தகவலுக்கு அனைவரும் காத்திருக்கின்றனர்.
ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் அதில் அளிக்கப்படக் கூடிய தளர்வுகள் ஆகியவை குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் பிற அதிகாரிகளுடன் கலந்தாலோசித்தவுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) முடிவெடுப்பார்.
இந்த சந்திப்புக்குப் பிறகு, இன்று மாலைக்குள் இது குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ALSO READ: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், ஜூன் 21-ம் தேதி திமுக MLA-க்கள் கூட்டம்
கொரோனா தொற்றின் அளவு படிப்படியாக குறைந்து வருவதால், மக்களுக்கான அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இன்னும் சில தளர்வுகள் அறிவிக்கப்படக்கூடும். அடுத்த கட்ட ஊரடங்கில் எந்தெந்த தாளர்வுகள் அறிவிக்கப்படக்கூடும் என இங்கே காணலாம்:
- சிறிய வழிபாட்டுத் தலங்கள் கொரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகளுடன் திறக்கப்படக்கூடும்.
- திருமணம் மற்றும் இறப்பு நிகழ்வுகளில் பங்குகொள்ளும் நபர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படலாம்.
- தொற்று கட்டுக்குள் இருக்கும் 27 மாவட்டங்களில் கட்டம் கட்டமாக அரசு பேருந்துகளை 50 சதவிகித பயணிகளுடன் இயங்க அனுமதிக்கப்படக்கூடும்.
- கடைகள் திறந்திருப்பதற்கான கால அளவு நீட்டிக்கப்படலாம்.
- பாதிப்பு அதிகமாகவுள்ள 11 மாவட்டங்களில், தொற்று எண்ணிக்கை குறைவான மாவட்டங்களில் அதிக தளர்வுகள் அறிவிக்கப்படலாம்.
- நூலகங்கள், அருங்காட்சியகங்கள் ஆகியவற்றை திறப்பது பற்றி முடிவெடுக்கப்படலாம்.
- அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களில் பணிக்கு வரும் பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படலாம்.
வெள்ளியன்று தமிழ்நாட்டில் 8,631 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,06,497 ஆக உயர்ந்தது. சென்னையில் மட்டும் நேற்று 492 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டது. நேற்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 287 பேர் இறந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 30,835 ஆக அதிகரித்தது. தமிழகத்தில் தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 89,009 ஆக உள்ளது.
ALSO READ: PMK:மேகதாது அணை பகுதியை ஆய்வு செய்ய குழு அமைக்க நடவடிக்கை தேவை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR