தமிழகத்தில் ஆகஸ்ட் 9 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
ஊரடங்கு நீட்டிப்பு குறித்து இன்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நிபுணர் குழுவுடன் கலந்துரையாடினார். அதன் பிறகு வெளியிடப்பட்ட அரசு அறிவிப்பில், ஊரடங்கு 9 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: உலக நாடுகளை பாடாய் படுத்திய கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மெல்ல குறையத் தொடங்கியுள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் தொற்றின் அளவு வெகுவாக குறைந்து விட்டது.
தமிழகத்திலும் (Tamil Nadu) தொற்றின் ஒற்றை நாள் எண்ணிக்கை பெருமளவு குறைந்துவிட்டது. மக்கள் பெரும்பாலும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி விட்டனர். இந்த நிலையில் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு நாளையுடன் நிறைவடைகிறது.
இதைத் தொடர்ந்து ஊரடங்கு நீட்டிப்பு குறித்து இன்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நிபுணர் குழுவுடன் கலந்துரையாடினார். அதன் பிறகு வெளியிடப்பட்ட அரசு அறிவிப்பில், ஊரடங்கு 9 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் தளர்வுகள் ஏதும் இன்றி தமிழகத்தில் ஊரடங்கு (Lockdown) மேலும் ஒரு வாரத்துக்கு, அதாவது ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு அளித்த தகவல்களின் முக்கிய அம்சங்கள் இதோ:
- மக்கள் பொது இடங்களிலோ பிற இடங்களிலோ கூட்டமாக கூடினால், அந்த பகுதியை மூட மாவட்ட அட்சியர் முடிவெடுக்கலாம்.
ALSO READ: TN District Wise corona update 29th july: மாவட்ட வாரியாக இன்றைய கொரோனா பாதிப்பு
- வணிக நிறுவனங்கள் கண்டிப்பாக வாடிக்கையாளர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனையை செய்ய வேண்டும்.
- தொற்று எண்ணிக்கை அதிகமாக உள்ள நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும்.
- வணிக வளாகங்கள் மற்றும் கடைகளில், அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் வாடிக்கையாளர்களை அனுமதிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
- ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அனைத்து கொரோனா விதிமுறைகளையும் கண்டிப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
- கொரோனா நோய் கண்டறிதல், தடுப்பூசி (Vaccination) செயல்முறை போன்ற பணிகள் முழு முனைப்புடன் நடக்க வேண்டும்.
- அனைத்து இடங்களிலும் பொது மக்கள், முகக்கவசம் அணிதல், தனி மனித இடைவெளியை பின்பற்றுதல் போன்ற கொரோனா விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
ALSO READ: இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி அவர்களின் பிறந்த தினம் இன்று!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR