இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி அவர்களின் பிறந்த தினம் இன்று!

இந்தியாவில் முதல் பெண் மருத்துவரும் தேவதாசி முறையை ஒழித்த வருமான சமூகப் போராளி முத்துலட்சுமி ரெட்டியின் 135 ஆவது பிறந்த தினம் இன்று. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 30, 2021, 07:51 PM IST
  • இந்தியாவில் முதல் பெண் மருத்துவர், தேவதாசி முறை ஒழித்த சமூகப் போராளி முத்துலட்சுமி ரெட்டி
  • சுந்தர ரெட்டி என்பவரை எந்த ஒரு சடங்கும் ,சம்பிரதாயமும் இன்றி திருமணம் செய்து கொண்டார்.
  • இவரின் சேவையினைப் பாராட்டி அரசு இவருக்கு 1956 இல் பத்ம விபூஷன் விருது வழங்கி சிறப்பித்தது.
இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி அவர்களின் பிறந்த தினம் இன்று! title=

இந்தியாவில் முதல் பெண் மருத்துவரும் தேவதாசி முறையை ஒழித்தவருமான சமூகப் போராளி முத்துலட்சுமி ரெட்டியின் 135 ஆவது பிறந்த தினம் இன்று. முத்துலட்சுமி ரெட்டி அவர்களை பற்றி ஒவ்வொருத்தரும் தெரிந்துக்கொள்ள வேண்டியது அவசியம். அவரின் பிறந்த நாளன இன்று, அவரைப்பற்றி தெரிந்துக்கொள்வோம்.

பிறப்பு: 
முத்துலட்சுமி ரெட்டி (சூலை 30 1886)ஆம் ஆண்டு ஜூலை  30 1886 தமிழ்நாட்டில் அன்றைய புதுக்கோட்டை சமஸ்தானத்தில் நாராயணசாமி, சந்திரம்மாள் தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தார். அக்காலகட்டத்தில் மூடநம்பிக்கைகளும், பெண்ணடிமைத்தனங்களும் கோலோச்சியிருந்தது. அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்ற சம்பிரதாயங்களும் மூடப் பழக்க வழக்கங்களும் உச்சத்தில் இருந்த காலகட்டம் அது. பெண்களுக்கு கல்வி என்பது எட்டாக்கனியாகவே இருந்தது.இந்த அவலங்களையெல்லாம் துடைப்பதற்காகவே பல தடைகளை தாண்டி கல்வி கற்றார்.

படிப்பு:
முத்துலட்சுமி ரெட்டி அவர்கள் தனது நான்காவது வயதில் திண்ணைப் பள்ளியில் தொடங்கி தனது பள்ளிப்படிப்பை வெற்றிகரமாக முடித்தார். பள்ளிப்படிப்பை முடித்த கையோடு கல்லூரியில் சேர்ந்து படிக்க விரும்பினார். இவரது விருப்பத்தை தெரிந்துகொண்ட அவரது தந்தை அவருக்கு ஊக்கமளித்து வந்தார். அப்போதைய காலகட்டங்களில் வெளியூரில் இருக்கக்கூடிய கல்லூரிகளில் பெண்களுக்கு விடுதி வசதி இல்லை. உள்ளூர் கல்லூரிகளிலும் பெண்களை சேர்க்கக் கூடாது என்ற கட்டுப்பாடு இருந்து வந்தது. இத்தகைய சூழலில்தான் புதுக்கோட்டை சமஸ்தானத்தில் உள்ள மன்னர் கல்லூரியில் சேர்வதற்கு 04.02.1904 அன்று விண்ணப்பித்திருந்தார். 
சமஸ்தான ஆட்சியில் இருந்த சில அதிகாரிகள், பழமைவாதிகள் இதனை கடுமையாக எதிர்த்தனர். ஆனால் அப்போதைய மன்னர் "மார்த்தாண்ட பைரவர் தொண்டைமான் பெண்கள் கல்வி கற்க வேண்டும் என்ற முற்போக்கு சிந்தனை அவருக்கு இருந்தமையால் எதிர்ப்புகளை யெல்லாம் பொருட்படுத்தாமல் முத்துலட்சுமி ரெட்டியை கல்லூரியில் பயில அனுமதி அளித்தார். கல்லூரிப் படிப்பில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து சிறிது காலம் அவருக்கு உடல்நலம் தடைபட்டது. உடல்நலம் பாதித்த மையால் கல்வி கற்க முடியாத சூழலும் ஆகிப்போனது. இதுபோக அவரது தாய் சந்திரமாள் அவரும் நோயால் சிரமப்பட்டு இறந்து போனார். அவர் தாயின்  இழப்பையும் நோயின் கொடுமைகளையும் பார்த்து அனுபவித்துத் தெரிந்து கொண்டமையால் அவருக்கு மருத்துவராக வேண்டும் என்ற வைராக்கியம் உதித்தது. 

பின்பு 1907இல் சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து மருத்துவம் படித்தார். இந்தியாவிலேயே முதல் பெண் மருத்துவராக சிறப்பாகப் படித்து 1912 ஆம் ஆண்டு பட்டத்துடன் வெளியே வந்தார். மருத்துவம் படித்து முடித்த முத்துலட்சுமி ரெட்டி 1914 ஆம் ஆண்டு சுந்தர ரெட்டி என்பவரை எந்த ஒரு சடங்கும் ,சம்பிரதாயமும் இன்றி திருமணம் செய்து கொண்டார். திருமணத்தின்போது முத்துலட்சுமி ரெட்டி அவர்கள் தன்னை சமமாக நடத்த வேண்டும் மற்றும் எனது சொந்த விருப்பங்களில் தலையிடக்கடாது என பல்வேறு நிபந்தனைகளுடனேயே கணவர் சுந்தர் ரெட்டியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு  மகன்கள் உள்ளனர்.

முதலாவது பெண் சட்டமன்ற உறுப்பினர்:
அன்றைய சென்னை மாகாண சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் சென்னை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் இந்திய பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர் சட்டசபை துணை தலைவர் எனப் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தார். இப் பொறுப்புகளில் எல்லாம் இருந்தபோதுதான் பல சமூக புரட்சிகளை செய்தார். அதில் ஒன்றுதான் தேவதாசி முறை ஒழிப்பு பற்றி இவர் சட்டமன்றத்தில் பேசும்போது அங்கிருந்த பெரும்பாலானோர் இதனை எதிர்த்தனர். உடனடியாக இவர் பெரியாரிடம் சென்று ஆலோசனைகளை கேட்டு சட்டமன்றத்தில் பேசினார். இவரின் முயற்சியாலேயே தேவதாசி ஒழிப்பு முறை முடிவுக்கு வந்தது.

முத்துலட்சுமி ரெட்டி செய்த புரட்சிகள் மற்றும் சமூக பணிகள்:
சென்னையில் புற்று நோய் பாதித்தவர்களுக்கென மருத்துவ மனை ஒன்றினை கட்டினார். இதனை அன்றைய பிரதமர் நேரு அவர்கள் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

பெற்றோர்கள் இன்றி தவித்த ஆதரவற்ற குழந்தைகளை வளர்த்து அவர்களுக்கு உதவிக்கரம் ஈட்டுவதற்காக சென்னை அடையாறில் அவ்வை இல்லம் ஒன்றை தொடங்கினார்.

தேவதாசி ஒழிப்பு முறை, இருதார தடைச் சட்டம், பெண்களுக்கு சொத்துரிமை வழங்கும் சட்டம், குழந்தை திருமண ஒழிப்பு முறை சட்டம், என இந்த சட்டங்களை யெல்லாம் நிறைவேற்ற அவர் பாடுபட்டிருக்கிறார்.

மறைவு:
இப்படித் தன் வாழ்நாளெல்லாம் சமூகத்தில் நிலவிவந்த மூடப்பழக்க வழக்கங்களை எதிர்த்து பல்வேறு தடைகற்ளைத் தாண்டி கல்வி கற்று முதல் பெண் மருத்துவர், துணை மேயர், சட்டமன்ற உறுப்பினர், சட்ட மன்ற துணை தலைவர் என்று சமூகத்திற்காக வாழ்ந்த சமூகப் போராளி டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்கள் 1968 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22 ஆம் தேதி மறைந்தார் (Muthulakshmi Reddy Died). இவரின் சேவையினைப் பாராட்டி அரசு இவருக்கு 1956 இல் பத்ம விபூஷன் (Padma Bhushan) என்ற விருதை வழங்கி சிறப்பித்தது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News