அண்ணா அறிவாலயம், சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இடையே முதற்கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இடையே முதற்கட்ட பேச்சுவார்த்தை இன்று காலை நடைபெற்றது. திமுக பொருளாளர் டி ஆர் பாலு தலைமையிலான திமுக கூட்டணி பேச்சுவார்த்தை குழு உடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திமுக குழுவில் முதன்மை செயலாளர் கே.என்.நேரு, கழகத் துணைப் பொதுச்செயலாளர்கள் இ.பெரியசாமி, க.பொன்முடி, எம்.பி.ஆ.ராசா, திருச்சி சிவா ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பேச்சு வார்த்தை குழுவில்  பி.சம்பத் மத்திய குழு (தலைவர்), மத்திய செயற்குழு உறுப்பினர் பெ.சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர்கள் க.கனகராஜ், என்.குணசேகரன் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். கடந்த முறை கோவை, மதுரை தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில் கூடுதல் தொகுதிகளை கேட்டுப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வலியுறுத்தினர்.


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் குழு திமுகவுடன் 20 நிமிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பேச்சு வார்த்தை குழு தலைவர் பி.சம்பத், "எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் தொகுதி உடன்பாடு செய்து கொள்வது தொடர்பாக திமுக குழுவினருடன் இன்று நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தினோம். பேச்சுவார்த்தை மிகவும் சுமூகமாக நடைபெற்றது, இரு தரப்பினரும் மனம் திறந்து எங்களுடைய கருத்துக்களை பரிமாறிக் கொண்டோம். 


மேலும் படிக்க | விஜய்யின் அரசியல் நுழைவிற்கு வாழ்த்து சொல்லாத பிரபலங்கள் யார் யார் தெரியுமா?


ஒவ்வொரு கட்சியினரும் கூடுதல் இடங்களில் போட்டியிட விருப்பம் தெரிவிப்பார்கள். நாங்களும் கடந்த முறையை விட தற்போது கூடுதல் இடங்களில் போட்டியிட வேண்டும் என்று எங்களுடைய விருப்பத்தை தெரிவித்தோம்.


பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது. கட்டாயமாக இரண்டு தரப்புக்கும் ஒரு சுமூகமான உடன்பாடு ஏற்படும் என்று நம்பிக்கை இருக்கிறது. விருப்பப்பட்டியல் தொடர்பாக பொருத்தமான நேரத்தில் எங்கள் கருத்தை தெரிவிப்போம்" என்று கூறினார். 


கூடுதலாக தொகுதிகள் கேட்டுள்ள  நிலையில் கடந்த முறை ஒதுக்கப்பட்ட 2 தொகுதிகள் மட்டும் ஒதுக்கப்பட்டால் அரசியல் ரீதியாக தேவையான முடிவை எடுப்பதாகவும் அவர் அளித்த பேட்டியில் தெரிவித்தார். 


மேலும் படிக்க | நாம் தமிழர் கட்சி தேசத்துக்கு எதிராக செயல்படுகிறது - எல் முருகன் பகீர் குற்றச்சாட்டு


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ