விஜய்யின் அரசியல் நுழைவிற்கு வாழ்த்து சொல்லாத பிரபலங்கள் யார் யார் தெரியுமா?

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக முக்கிய பேசு பொருளாக மாறி இருப்பது விஜய் ஆரம்பித்த புதிய கட்சி தொடர்பான செய்திகள் தான்.

 

1 /5

கடந்த பிப்ரவரி இரண்டாம் தேதி நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற தனது புதிய கட்சியை அறிவித்தார். 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக  தெரிவித்துள்ளார்.  

2 /5

விஜய்யின் அரசியல் நுழைவிற்கு பல சினிமா பிரபலங்களும், அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.  

3 /5

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள சில முக்கிய சினிமா பிரபலங்கள் விஜய்க்கு வாழ்த்து கூறாமல் இருந்து வருகின்றனர்.  

4 /5

நடிகர் ரஜினிகாந்த், சூர்யா, கார்த்தி, விஜய் சேதுபதி, தனுஷ் உள்ளிட்ட முக்கிய சினிமா பிரபலங்கள் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்தும், விஜய்க்கு தங்களது வாழ்த்துக்களை கூறாமல் இருந்து வருகின்றனர். கமல்ஹாசன் வெளிநாட்டில் இருந்தபோதிலும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.  

5 /5

தற்போது விஜய் ஒரு அறிக்கையின் மூலம் தனக்கு  வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.